அஞ்சல் மூலம் இலவச மருந்து விநியோகம்; அக்.1 முதல் தொடக்கம்

26 செப்டெம்பர் 2026, 8:15 AM
அஞ்சல் மூலம் இலவச மருந்து விநியோகம்; அக்.1 முதல் தொடக்கம்

பாடாங் பெசார், செப்.26 – அஞ்சல் மூலம் மருந்துகளைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்கும் நோயாளிகளுக்கான விநியோகச் செலவை அக்டோபர் 1ஆம் தேதி முதல் அரசாங்கமே முழுமையாக ஏற்கவுள்ளது.

தொடர்புத் துறை அமைச்சின் கீழ் செயல்படும் மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (MCMC), சுகாதார அமைச்சுடன் இணைந்து இந்த இலவச மருந்து விநியோகச் சேவையை நாடு முழுவதும் செயல்படுத்தவுள்ளதாக தகவல் தொடர்புத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

இந்த திட்டத்திற்காக சுமார் RM5 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதற்கு முன்னர் நோயாளிகள் அஞ்சல் மூலம் மருந்துகளைப் பெறுவதற்கான விநியோகக் கட்டணத்தைச் செலுத்த வேண்டியிருந்தது

ஆனால், அக்டோபர் 1ஆம் தேதி முதல் இந்தச் சேவையைப் பயன்படுத்தும் அனைவரும் எந்தக் கட்டணத்தையும் செலுத்தத் தேவையில்லை. அந்தச் செலவு முழுமையாக அரசாங்கத்தால் ஏற்கப்படும்.

‘அஞ்சல் மூலம் மருந்து’ (UMP) திட்டத்தின் கீழ், மாதந்தோறும் சுமார் 80,000 நோயாளிகளுக்கான மருந்து விநியோகச் செலவை அரசாங்கம் முழுமையாக ஏற்கும் என ஃபஹ்மி கடந்த ஜூன் மாதம் தெரிவித்திருந்தார்.

இதன் மூலம் மருத்துவமனை அல்லது சுகாதார நிலையங்களுக்குச் சென்று மருந்துகளைப் பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்கொள்ளும் நோயாளிகள், தங்களுக்கு தேவையான மருந்துகளை அஞ்சல் மூலம் இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.