சிலாங்கூர் வெற்றிகரமான சமூகத் திட்டங்களை விரிவுபடுத்த வேண்டும்: யுனிசெஃப்

26 செப்டெம்பர் 2026, 4:35 AM
சிலாங்கூர் வெற்றிகரமான சமூகத் திட்டங்களை விரிவுபடுத்த வேண்டும்: யுனிசெஃப்

ஷா ஆலம், செப்.26 – சிலாங்கூர் மாநில அரசாங்கம் புதிதாக பல திட்டங்களை உருவாக்குவதற்குப் பதிலாக, ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு நல்ல பலனைத் தரும் சமூகத் திட்டங்களை மேலும் வலுப்படுத்தி விரிவுபடுத்த வேண்டும்.

இதனை ஐக்கிய நாடுகளின் யுனிசெஃப் மலேசியாவின் சமூகக் கொள்கை நிபுணர் லீ மின் ஹுய் வலியுறுத்தியுள்ளார்.

‘மாமாகெர்ஜா’ (MamaKerja) மற்றும் சிலாங்கூர் மழலையர் பள்ளி உதவித் திட்டம் உள்ளிட்ட ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்களை விரிவுபடுத்த வேண்டும் என லீ முன்மொழிந்தார்.

அத்தகைய திட்டங்களுடன் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து, பெற்றோர் வழிகாட்டுதல் மற்றும் குழந்தைப் பராமரிப்பு ஆகியவற்றுக்கான கூடுதல் ஆதரவையும் வழங்க வேண்டும் என அவர் கூறினார்.

அதேவேளையில், பிறந்தது முதல் நான்கு வயது வரையிலான குழந்தைகள் மற்றும் அதிக அளவிலான பராமரிப்பு தேவைப்படும் குடும்பங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

இதனிடையே, குடும்பங்களுக்கு ஏற்ற பணியிடச் சூழலை உருவாக்குவது தொடர்பிலும் லீ பல்வேறு பரிந்துரைகளை முன்வைத்தார்.

குழந்தைப் பராமரிப்பு தொடர்பான மாவட்ட அளவிலான மற்றும் சமூகப் பொருளாதாரத் தரவுகள் விரிவாக சேகரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

முன்னோடித் திட்டங்கள் மூலம் பெறப்படும் அனுபவங்களும், விரிவான தரவுச் சேகரிப்பும், சிலாங்கூர் மாநிலத்தில் எந்தத் திட்டங்களை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்பதைத் துல்லியமாக அடையாளம் காண உதவும் என லீ தெரிவித்தார்.

அதன் மூலம் தெளிவாகக் காணப்படும் சமூக இடைவெளிகளை நிவர்த்தி செய்யும் திட்டங்களுக்கு அரசாங்க நிதி இலக்குடன் செலவிடப்படுவதையும் உறுதி செய்ய முடியும்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.