இனவாதத்தைப் பயன்படுத்தி அரசியல் ஆதரவை திரட்ட வேண்டாம்: அன்வார்

21 செப்டெம்பர் 2026, 4:24 AM
இனவாதத்தைப் பயன்படுத்தி அரசியல் ஆதரவை திரட்ட வேண்டாம்: அன்வார்

மலாக்கா, செப். 21 — அரசியல் கட்சிகள் தங்களுக்கான ஆதரவைத் திரட்டுவதற்காக இனவாதப் பிரச்சனைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக அரசியல் சூழ்நிலை தங்களுக்கு சாதகமாக இல்லாதபோது அல்லது ஆதரவை இழக்கும் நிலை ஏற்படும்போது, சில அரசியல் கட்சிகள் இனவாதப் பிரச்சனைகளை முன்னிறுத்துவதாக அவர் கூறினார்.

மலேசியா சுதந்திரம் அடைந்து 69 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், நாட்டில் வாழும் எந்தவொரு சமூகத்திற்கும் இனவாதப் பிரச்சனைகள் இனியும் முக்கிய முன்னுரிமையாக இருக்கக்கூடாது.

சுதந்திரம் அடைந்து ஏறத்தாழ 70 ஆண்டுகளை நெருங்கும் மலேசியா, எந்தத் தரப்பினர் ஆட்சி செய்தாலும் பல்வேறு இன மக்களின் ஒற்றுமை மற்றும் பலத்தின் அடிப்படையில் முன்னேறும் நாடாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அன்வார் தெரிவித்தார்.

1940கள் மற்றும் 1950களில் இனங்களின் எதிர்காலம் மற்றும் பாதுகாப்பு குறித்து மக்கள் கவலை கொண்டிருந்ததை தாம் புரிந்துகொள்வதாகவும், அக்காலகட்டத்தில் நாடு சுதந்திரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்ததாகவும் அன்வார் குறிப்பிட்டார்.

1960களிலும் மலேசியா புதிய நாடாக இருந்ததால், சமூகங்களின் எதிர்காலம் குறித்த அச்சங்கள் இருந்ததாக அவர் கூறினார்.

ஆனால், தற்போதைய சூழலில் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்த நாடாக மலேசியாவின் எதிர்காலம் குறித்து சிந்தித்துப் பேச வேண்டிய நேரம் இது என்றும் அன்வார் வலியுறுத்தினார்.

மக்கள் ஆட்சி அமைக்கும் ஆணையை யாருக்கு வழங்கினாலும், மக்கள், நாட்டின் நலன் மற்றும் இளைய சமூதாயத்தின் எதிர்காலத்தை பாதுகாப்போம் என்று அவர்கள் உறுதியளிக்க வேண்டும் என்றார்.

இதனிடையே, ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிரான நடவடிக்கையில் அரசாங்கம் எந்தவித சமரசத்தையும் செய்யாது என்றும் பிரதமர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

நாட்டில் இருந்து ஊழலை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து கடுமையாக முன்னெடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.