சிறை நெரிசலைத் தவிர்க்க வீட்டுக் காவல் சட்டம் பரிந்துரை

20 செப்டெம்பர் 2026, 3:38 AM
சிறை நெரிசலைத் தவிர்க்க வீட்டுக் காவல் சட்டம் பரிந்துரை
சிறை நெரிசலைத் தவிர்க்க வீட்டுக் காவல் சட்டம் பரிந்துரை

ஷா ஆலாம், செப் 20 : நாடு முழுவதும் உள்ள 41 சிறைகளில் தற்போது சுமார் 93,000 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், இந்த சிறைகளில் அடைத்து வைப்பதற்கான இடவசதி சுமார் 75,000 பேர் மட்டுமே ஆகும்.

இது கைதிகளைக் கையாள்வதில் ஒரு புதிய அணுகுமுறையின் அவசியத்தை ஏற்படுத்தியிருப்பதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

உள்துறை அமைச்சின் முயற்சிகளில் ஒன்று, வீட்டுக் காவல் சட்டத்தை உருவாக்குவது ஆகும். இது குறிப்பாக இன்னும் விசாரணைக்காகக் காத்திருக்கும் தடுப்புக் காவல் நபர்களை உள்ளடக்கியதாகும்.

" நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நபர்களை, நீதிமன்ற விசாரணைத் தேதி வரை மின்னணு கண்காணிப்பு சாதனத்தைப் (electronic monitoring device) பயன்படுத்தி வீட்டுக் காவலில் வைப்பதை பரிசீலிக்கலாம்.

"இருப்பினும், கடுமையான குற்றவியல் வழக்குகள் இந்த அணுகுமுறைக்குப் பொருந்தாது " என்று அவர் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த வீட்டுக் காவல் சட்டப் பரிந்துரை ஒன்றும் புதிய விஷயம் அல்ல என்று கூறிய சைஃபுதீன், சிறைகளை நிரப்பும் பெரும்பான்மை தரப்பாக இருக்கும் தடுப்புக் காவல் நபர்களுக்காகவே இது கொண்டு வரப்படுகிறது என்று விளக்கினார்.

இந்த சட்டத்தை இயக்கும் நடைமுறையைத் தொடங்க அமைச்சரவை, உள்துறை அமைச்சுக்கு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

"இதன் அசல் நோக்கம் மாறவில்லை: சிறை நெரிசலைக் குறைப்பது மற்றும் நாட்டின் திருத்த அமைப்பை (correctional system) மேலும் திறம்பட நிர்வகிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்துவதாகும்.

"இதுவே நாங்கள் ஆரம்பத்திலிருந்தே விவாதித்து வந்த வீட்டுக் காவல் சட்டத்தின் பின்னணியும் அசல் நோக்கமும் ஆகும்," என்று அவர் கூறினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.