பெட்டாலிங் ஜெயா அக் 31: ஆட்டிசம் குறைபாடு கொண்ட ஆறு வயது சிறுவன் சேன் ராயன் அப்துல் மாட்டின் உடலில் காயங்கள் ஏற்படும் அளவிற்கு, அவனை புறக்கணித்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிலிருந்து அச்சிறுவனின் தாயாரான இஸ்மனிரா அப்துல் மானாஃப்புக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இங்குள்ள பெட்டாலிங் ஜெயா செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கடந்த ஜூலை 21-ஆம் தேதி தொடங்கிய இவ்வழக்கு விசாரணையில், சிறார் உளவியல் மருத்துவ நிபுணர் டாக்டர் நோர் ஐஷா ரொஸ்லி, சேன் ராயன் தாத்தா சஹாரி முஹமட் ரேபா மற்றும் இஸ்மனிராவின் நெருங்கிய தோழியான உமி ஷாஃபிகா ரோஹிசால் ஆகியோரும் இவ்வழக்கின் சாட்சிகளாவர்.
மேலும் அச்சிறுவனின் தாயாரான இஸ்மனிராவிற்கு எதிரான போதிய முகாந்திரங்களை அரசு தரப்பு சமர்ப்பித்ததை அடுத்து, அவரை தற்காப்பு வாதம் புரியும்படி நீதிபதி ஷாலிசா கடந்த ஜூலை 21-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார்.
மேலும் சம்பவத்தின் போது சிறுவனை முறையான கண்காணிப்பு இல்லாமல் தனியாக விட்டுச் சென்றதே அவன் காணாமல் போனதற்கும், உடல் ரீதியான காயங்களுக்கும் வழிவகுத்தது என்று கண்டறியப்பட்டது.
காணாமல் போன ஜைன் ரய்யான், டிசம்பர் 6, 2023ஆம் ஆண்டு இடாமான் அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகிலுள்ள ஒரு சிற்றோடை அருகே சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.




