கங்கார், ஆக. 21- கடந்த ஜூலை மாதம் கோல பெர்லிஸில் வீடு புகுந்து கொள்ளையிட்ட குற்றத்தை ஒப்புக்கொண்ட மூன்று சீன ஆடவர்களுக்கு இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 28 மாத சிறைத்தண்டனை விதித்தது.
யின் குவாங்குவா (வயது 50), லின் பிங்டே (வயது 54) மற்றும் லுவோ ஜிபிங் (வயது 38) ஆகியோருக்கு எதிரான தண்டனை கைது செய்யப்பட்ட நாளான ஜூலை 18 ஆம் தேதி தொடங்கி அமலுக்கு வருவதாக மாஜிஸ்திரேட் அனா ரோசானா முகமட் நோர் தனது தீர்ப்பில் கூறினார்.
கடந்த ஜூலை 18ஆம் தேதி இரவு 10.13 மணிக்கு கோல பெர்லிஸில் உள்ள தாமான் புக்கிட் குபு ஃபாஸா 2 பகுதியில் 62 வயது முதியவரின் வீட்டிற்குள் திருடும் நோக்கில் நுழைந்ததாக மூவரும் கூட்டாகக் குற்றம் சாட்டப்பட்டனர்.
அவர்கள் மீது தண்டனைச் சட்டத்தின் 457 மற்றும் தண்டனைச் சட்டத்தின் 34வது பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்க இச்சட்டம் வகை செய்கிறது.
வீடு புகுந்து கொள்ளையிட்ட மூன்று சீனப் பிரஜைகளுக்கு 28 மாதச் சிறை
21 ஆகஸ்ட் 2025, 9:10 AM


