மைகார்ட்: இயற்கை நிற தலைமுடி அனுமதிக்கப்படும்: JPN

19 செப்டெம்பர் 2026, 2:45 AM
மைகார்ட்: இயற்கை நிற தலைமுடி  அனுமதிக்கப்படும்: JPN

ஷா ஆலாம், செப் 19 : புதிய தலைமுறை மைகார்ட் விண்ணப்பதாரர்கள் இயற்கையான நிறத்தில் தலைமுடி வைத்திருக்கவும், கருப்பு நிறத்தில் தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லாமல், அடர் நிறத்திலான (Dark color) முக்காடு (Tudung) அணியவும் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இயற்கையாகவே குறிப்பிட்ட தலைமுடி நிறத்தைக் கொண்டிருப்பவர்கள் உட்பட, மிகத் துல்லியமாகவோ அல்லது பளிச்சென்றோ தெரியாத தலைமுடி நிறத்தைக் கொண்டிருக்க இன்னும் அனுமதிக்கப்படுகிறது என

தேசிய பதிவுத் துறையின் அடையாள அட்டைப் பிரிவின் இயக்குநர் முஹம்மது அஷ்ரப் சுகார்டி தெரிவித்தார்.

அடிப்படையில் நாம் வண்ணமயமான தலைமுடியை அனுமதிக்கிறோம், குறைந்தபட்சம் அந்த நிறம் மிகவும் பளிச்சென்று தெரியாத ஒன்றாக இருக்க வேண்டும்.

"உதாரணமாக, அவர் ஒரு யூரேசிய (Eurasian) வம்சாவளியைச் சேர்ந்தவராக இருந்து, இயற்கையாகவே அந்த முடி நிறம் இருந்தால், நாம் அனுமதிக்கிறோம், அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஆனால், தலைமுடி முற்றிலும் பொன்னிறமாக (Totally blonde) இருக்கக் கூடாது.

இயற்கையான நிறங்களுக்கு நெருக்கமாக இருக்கும் வண்ணங்களே அனுமதிக்கப்படும்," என்று JPN ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட ஒரு காணொளியில் அவர் கூறினார்.

சமீபத்தில் புதிய அடையாள அட்டையில் வண்ணத் தலைமுடி இருப்பது குறித்து வைரலான சர்ச்சையைத் தொடர்ந்து அவர் இந்த விளக்கத்தை அளித்தார்.

மேலும் , மைகார்ட் புகைப்படம் எடுக்கும் போது விண்ணப்பதாரர்கள் கருப்பு நிற முக்காடைத் தான் அணிய வேண்டும் என்று JPN நிபந்தனை விதிக்கவில்லை என்றார்.

அதற்குப் பதிலாக, புகைப்படத்தின் பின்னணி வெள்ளை நிறத்தில் இருப்பதால், முக்காடின் உருவம் தெளிவாகத் தெரிவதை உறுதி செய்வதற்காக விண்ணப்பதாரர்கள் அடர் நிறத்திலான முக்காடை தேர்வு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

"நாங்கள் கருப்பு நிற முக்காடு என்று கூறவில்லை. அடர் நிறம் என்றே கூறுகிறோம், ஏனெனில் அடிப்படையில் நமது பின்னணி வெள்ளை நிறமாகும்."விண்ணப்பதாரர் வெளிர் நிறத்திலான தலைப்பாரத்தை அணிந்தால், புகைப்படத்தில் அந்த முக்காடு தெளிவாகத் தெரியாது," என்று அவர் கூறினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.