சுக்மா: வர்த்தக இடங்களுக்கு விண்ணப்பிக்க தொழில்முனைவோருக்கு அழைப்பு

4 ஆகஸ்ட் 2026, 1:00 AM
சுக்மா: வர்த்தக இடங்களுக்கு விண்ணப்பிக்க தொழில்முனைவோருக்கு அழைப்பு

ஷா ஆலம், ஆகஸ்ட் 3: சுக்மா போட்டியின் போது, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்கள் (SMEs) வியாபாரம் செய்வதற்கு ஏதுவாக வர்த்தக இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கிள்ளான் அரச மாநகர் மன்றம் (MBDK) அழைப்பு விடுத்துள்ளது.

இந்த வர்த்தக இடங்களுக்கான விண்ணப்பங்கள் தற்போது திறக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை அதிகாரப்பூர்வ உரிமத்திற்கு இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம் என மாநகர் மன்றன் அறிவித்துள்ளது. குறிப்பாக, உணவு வண்டிகள் (food trucks) மற்றும் கூடாரங்களை (tents) அமைத்து வியாபாரம் செய்ய விரும்பும் வணிகர்கள் இதற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர்.

இந்த வர்த்தக இடங்கள் சுமா விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் முக்கிய மூன்று இடங்களை மையமாகக் கொண்டு ஒதுக்கப்பட்டுள்ளன.

ஆகஸ்ட் 20 முதல் 23 வரை ரக்பி போட்டி நடைபெறும் சுல்தான் சுலைமான் மைதானம், ஆகஸ்ட் 15 முதல் 23 வரை ஹாக்கி போட்டி நடைபெறும் பண்டாமாரான் ஹாக்கி ஸ்டேடியம் (Pandamaran Hockey Stadium), மற்றும் ஆகஸ்ட் 18 முதல் 23 வரை டேபிள் டென்னிஸ் எனப்படும் பிங் பாங் போட்டி நடைபெறும் புக்கிட் ராஜா மண்டபம் (Dewan Bukit Raja) ஆகிய இடங்களில் வியாபாரம் செய்ய வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

வர்த்தக இடங்கள் குறைவாக இருப்பதால், விண்ணப்பிக்கும் வணிகர்களுக்கு 'முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை' (first come, first served) என்ற அடிப்படையில் இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வழங்கப்படும் என்று கிள்ளான் மாநகர் மன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த மாபெரும் விளையாட்டுத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள், அதிகாரிகளுடன், ஆதரவாளர்களும் பார்வையாளர்களும் பெருமளவில் திரளுவார்கள். எனவே, உள்ளூர் வணிகர்கள் இந்த பொன்னான வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களது வணிகத்தை மேலும் வளர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.