சிலாங்கூரின் நீர் ஆதாரத்தைத் திறம்பட நிர்வகிக்க LUAS, MetMalaysia புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப் புதுப்பித்தன

17 செப்டெம்பர் 2026, 6:01 PM
சிலாங்கூரின் நீர் ஆதாரத்தைத் திறம்பட நிர்வகிக்க  LUAS, MetMalaysia புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப் புதுப்பித்தன

ஷா ஆலாம், செப் 17 : தீவிர வானிலையை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடாகவும், நீர் ஆதார நிர்வகிப்புக்கு ஆதரவளிக்கும் வகையிலும், சிலாங்கூர் நீர் வாரியம் (LUAS) மலேசிய வானிலை ஆய்வுத் துறையுடன் தனது புரிந்துணர்வு ஒப்பந்தத்தை புதுப்பித்துள்ளது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் நான்கு ஆண்டுகள் கால வரம்பைக் கொண்டுள்ளது.

அதன் கீழ், இரு தரப்பினரின் மழைப்பொழிவு டெலிமெட்ரி (Telemetry) நிலையத் தரவுகள், 'ஒருங்கிணைந்த நீர் மூலதன தகவல் நிர்வகிப்பு முறையின்' (IWRIMS) அகப்பக்கத்தில் இணைக்கப்படும்.

"இந்த ஒத்துழைப்பின் மூலம், இரு அமைப்புகளின் மழை, வானிலை மற்றும் ராடார் தகவல்களை, கண்காணிப்பு நோக்கத்திற்காக ஒருங்கிணைந்த முறையில் பயன்படுத்த முடியும்.

இந்தத் தரவுகள் சிலாங்கூர் நதிப் படுகை (Sungai Selangor Basin), லங்காட் நதிப் படுகை (Sungai Langat Basin) மற்றும் கிள்ளான் நதிப் படுகை (Sungai Klang Basin) ஆகியவற்றில் உள்ள டெலிமெட்ரி நிலையப் பதிவுகள், LUAS இன் மழைப்பொழிவு டெலிமெட்ரி நிலையங்கள் மற்றும் மலேசிய வானிலை மையத்தின் வானிலை ஆய்வு நிலையங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கும்," என்று சிலாங்கூர் நீர் வாரியம் அறிக்கையில் தெரிவித்தது.

மேலும் ஒருங்கிணைந்த இந்த தகவல்கள், செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதோடு, தற்போதைய சூழ்நிலையின் அடிப்படையில் மிகவும் துல்லியமான முடிவுகளை எடுக்க ஆதரவளிக்கும்.

அதுமட்டுமின்றி, நதி மற்றும் குளத்து நீர் ஆதாரங்களின் பயன்பாட்டை மேம்படுத்துதல் மற்றும் கீழ்நிலைப்பகுதி (Downstream) முகத்துவாரங்களில் உள்ள சுத்திகரிக்கப்படாத நீர் விநியோகத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அணைகளில் இருந்து நீர் திறப்பை ஒருங்கிணைப்பது உள்ளிட்ட நீர் ஒழுங்குமுறை மற்றும் நிர்வகிப்பு நடவடிக்கைகளை LUAS மேம்படுத்த முடியும்.

"இம்மாநிலத்தின் நீர் ஆதாரங்களின் தரம் மற்றும் அளவை உகந்த நிலையில் பேணுவதற்கு இந்த முயற்சி ஆதரவளிப்பதோடு, எல் நினோ (El Nino) பருவ நிலையை எதிர்கொள்வதற்கான ஆயத்த நிலையை வலுப்படுத்துவதற்கும் இது முக்கியமானது.

மிகவும் விரிவான வானிலை மற்றும் நீரியல் (Hydrological) தகவல்கள் கிடைப்பதன் மூலம், சிலாங்கூரில் தடையில்லா நீர் விநியோகத்தை உறுதி செய்வதற்காக நீர் ஆதாரங்களின் கண்காணிப்பு, திட்டமிடல் மற்றும் நிர்வகிப்பு ஆகியவற்றைத் திறம்பட, துரிதமாக மற்றும் ஒருங்கிணைந்த முறையில் செயல்படுத்த முடியும்," என்று அது கூறியது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.