மாமன்னர் விரைவில் குணமடைய பிரதமர் அன்வார் பிரார்த்தனை

27 பிப்ரவரி 2026, 7:47 AM
மாமன்னர் விரைவில் குணமடைய பிரதமர் அன்வார் பிரார்த்தனை

கோலாலம்பூர், பிப் 27 - மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அவர்கள் விரைவில் குணமடைய தாம் பிராத்திப்பதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

"மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அவர்கள் நீடித்த ஆரோக்கியத்துடனும், எல்லாம் வல்ல இறைவனின் பாதுகாப்பிலும், அருளிலும், கருணையிலும் எப்போதும் இருக்க வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன்," என
அவர் தமது முகநூல் பதிவில் தெரிவித்திருந்தார்.

இஸ்தானா நெகாராவின் அறிக்கைப்படி, மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அவர்கள் தசை மற்றும் எலும்பு தொடர்பான (musculoskeletal) வலியால், குறிப்பாக முதுகு மற்றும் இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட உபாதையால் நலக்குறைவாக உள்ளார்.

சிகிச்சை மற்றும் குணமடைதல் செயல்முறைக்கு வழிவகுக்கும் வகையில், மாமன்னர் ஓய்வெடுக்குமாறும், எந்தவொரு நிகழ்விலும் கலந்துகொள்ள வேண்டாம் என்றும் மருத்துவ நிபுணர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இஸ்தானா நெகாரா தகவல்
வெளியிட்டது.

-- பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.