மலேசிய தினம்: ஒற்றுமையைப் பேண மலேசியர்களுக்கு சிலாங்கூர் சுல்தான் அழைப்பு

16 செப்டெம்பர் 2026, 2:15 AM
மலேசிய தினம்: ஒற்றுமையைப் பேண மலேசியர்களுக்கு சிலாங்கூர் சுல்தான் அழைப்பு

ஷா ஆலாம், செப்.16 — மலேசிய தினத்தை முன்னிட்டு, நாட்டில் நிலவும் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை தொடர்ந்து பேணுவதுடன், தேசிய ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துமாறு சிலாங்கூர் சுல்தான் மலேசியர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இனம், சமயம் மற்றும் கலாச்சாரம் ஆகிய வேறுபாடுகளைக் கடந்து, சகிப்புத்தன்மையையும் ஒருவரையொருவர் மதிக்கும் பண்பையும் மக்கள் தொடர்ந்து வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா வலியுறுத்தியுள்ளார்.

தற்போதைய தலைமுறையினருக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் மலேசியா தொடர்ந்து அமைதியான, வளமான மற்றும் ஒற்றுமை நிறைந்த நாடாக நிலைத்திருக்க வேண்டும் என பேஸ்புக் பதிவில் சுல்தான் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 16ஆம் தேதி கொண்டாடப்படும் மலேசிய தினம், மலேசியா உருவாக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தை நினைவுகூரும் நாளாகும்.

தீபகற்ப மலேசியா, சபா மற்றும் சரவாக் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களை ஒரே இறையாண்மை கொண்ட நாட்டின் கீழ் ஒன்றிணைத்த தேசிய ஒற்றுமையின் அடையாளமாக இந்த முக்கியத்துவம் வாய்ந்த நாளை மக்கள் எப்போதும் நினைவுகூர வேண்டும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா மற்றும் சிலாங்கூர் தெங்கு பெர்மைசூரி நோராஷிகின் ஆகியோரும் அனைத்து மலேசியர்களுக்கும் 2026ஆம் ஆண்டுக்கான மலேசிய தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.