ஷா ஆலாம், செப்.15: கோலா லங்காட் ஊராட்சி மன்றத்தின் (MPKL) அமலாக்கத் துறை, தெலோக் பங்லிமா காராங், தாமான் ஜெயா உத்தாமா பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பல்வேறு விளம்பரங்களை அகற்றியுள்ளது.
கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கையின்போது, சம்பந்தப்பட்ட விளம்பரங்கள் எதுவும் ஊராட்சி மன்றத்தின் உரிய அனுமதி அல்லது ஒப்புதலைப் பெறாமல் வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
2007ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட MDKL விளம்பரச் சட்டத்தின் சிறு விதி 7-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட விளம்பரங்கள் சிறு விதி 21(1)-ன் அடிப்படையில் அகற்றப்பட்டதாக MPKL தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.
அகற்றப்பட்ட விளம்பரங்களில் பணக் கடன் வழங்கும் சேவைகள், தனியார் பயிற்சி வகுப்புகளை முன்னிறுத்தும் விளம்பரங்களும் இடம்பெற்றிருந்தன.







