கோலாலம்பூர், ஜூன் 6: இங்குள்ள தாமான் சிராஸ் இண்டாவில் உள்ள ஒரு மாடி வீட்டில் நேற்று காயப்போட்டிருந்த துணிகளைத் திருடிய சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
நேற்று மாலை 5 மணியளவில் சமூக வலைத்தளங்களில் வைரலான காணொளி ஒன்றை தாங்கள் கண்டறிந்ததாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கைருல் அனுவார் காலிட் தெரிவித்தார். அதில், மர்ம நபர் ஒருவர் வீட்டின் வேலியைத் தாண்டி குதித்து வளாகத்திற்குள் நுழைவது பதிவாகியுள்ளது.
வீட்டின் வெளியே காயப்போட்டிருந்த துணிகள் காணாமல் போனது குறித்து காலை 10 மணியளவில் உணர்ந்த உள்ளூர் பெண் ஒருவர், அன்றைய தினமே காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதாகவும் அவர் கூறினார்.
“புகார்தாரர் தனது வீட்டில் உள்ள சிசிடிவி (CCTV) கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், கருப்பு நிற ஜூபா (Jubah) உடை அணிந்த நபர் வேலியைத் தாண்டி வீட்டின் முற்றத்திற்குள் நுழைந்து துணிகளைத் திருடிச் செல்வது தெளிவாகப் பதிவாகியுள்ளது,” என்று இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அவர் குறிப்பிட்டார்.
இந்தச் சம்பவத்தில், வீட்டில் காயப்போட்டிருந்த துணிகள் மட்டுமே திருடப் பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாக கைருல் அனுவார் மேலும் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில், குற்றவியல் சட்டம் பிரிவு 379 (திருட்டு) மற்றும் பிரிவு 447 (குற்றவியல் அத்துமீறல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சிராஸ் இண்டாவில் காயப்போட்டிருந்த துணிகளைத் திருடிய மர்ம நபர்: போலீசார் வலைவீச்சு; சிசிடிவியில் பதிவான காட்சி
6 ஜூன் 2026, 3:07 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
சுபாங் ஜெயாவில் 200-க்கும் மேற்பட்ட விவேக வாகன நிறுத்தமிட CCTV கேமராக்கள் பொருத்தம்
Dewi Abdul Rahman
19 ஆகஸ்ட் 2026

national
பள்ளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சிசிடிவி (CCTV) கேமராக்கள் பொருத்தப்படும் - 8 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு
Shalini Rajamogun
8 மே 2026

national
333 விடுதிப் பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் இரண்டாம் கட்டத் திட்டத்தை விரைவுபடுத்துகிறது கல்வி அமைச்சு
Shalini Rajamogun
15 மார்ச் 2026

national
எல்லைப் பகுதிகளில் உள்ள அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்
Shalini Rajamogun
3 பிப்ரவரி 2026

வகைnational
உங்கள் கருத்து என்ன?



