விஜய் உடனான சந்திப்பு திட்டமிடப்படுகிறது : பிரதமர் அன்வார்

14 செப்டெம்பர் 2026, 3:30 AM
விஜய் உடனான  சந்திப்பு திட்டமிடப்படுகிறது  : பிரதமர் அன்வார்

புது டில்லி, செப் 14 : தமிழ் நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜயுடனான சந்திப்புக்கு இன்னும் திட்டமிடப்படுகிறது. அந்தச் சந்திப்பு புத்ராஜெயா அல்லது தமிழ்நாடு சென்னையில் நடைபெறலாமென பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

தந்தி டிவிக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில், மலேசியாவின் வருகைக்கு சென்னை பதிலளிக்கவில்லை எனக் கூறப்படுவதை அன்வார் மறுத்தார்.

இந்தியாவிற்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டிருக்கும் அன்வார், புது டில்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டிற்குப் பிறகு, சென்னைக்குச் செல்வார் என கூறப்பட்டிருந்தது.

எனினும் அந்தப் பயணம் இறுதி நேரத்தில் ரத்துச் செய்யப்பட்டது.

" தொடக்கம் முதலே தமிழ்நாடு முதலமைச்சர் அலுவலகம் , விஜயின் வேலை - பயண அட்டவணையை சரிபார்க்க முயன்று வருவதாகக் கூறியிருந்தது. விஜயிற்கு ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் இருந்தன. நான் புது டில்லி, கேரளம், மாலத் தீவு ஆகிய இடங்களுக்கு செல்ல வேண்டியிருப்பதால் எனக்கும் குறுகிய நேரமே இருந்தது.

அதையடுத்து தமிழ் நாட்டுக்கான பயணத்தைத் தொடர இயலாது எனக் கூறினேன்" என்று பிரதமர் விளக்கமளித்தார்.

மலேசியாவில் , இந்தியர்களில் பெரும்பாண்மையினர் தமிழர்களாக உள்ளனர். திரைப்பட பிரபலம் என்ற ரீதியில் மட்டும் விஜய்-யின் புகழ் பார்க்கப்படாமல், அவ்விரு நாட்டு மக்களுக்கு இடையில் உறவை மேலும் வலுப்படுத்தும் ஒரு வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது.

வகைantarabangsa

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.