தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வியப்பையும் எதிர்பாராத வெற்றிகளையும் குவித்திருக்கிறது.
புதிதாக களமிறங்கிய விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் தேர்தலிலேயே 1.50 கோடிக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று முதல் இடத்துக்கு வந்துள்ளது. இது அரை நூற்றாண்டு சாதனையாகக் கருதப்படுகிறது.
தனிப்பெரும்பான்மை பெற்று உதிரிக் கட்சிகளின் துணையுடனோ விஜய் முதல்வராக அமர்ந்தால் திராவிடக் கட்சிகளை சாரா முதல் முதலமைச்சர் என்னும் அறுபதாண்டு சாதனையை அவர் நிகழ்த்தியிருப்பர்.
தமிழக வாக்காளர்கள் மத்தியில் விஜய்க்கு ஆதரவாக மிகப்பெரிய அலை வீசி இருக்கிறது.
ஆயினும், வாக்கு எண்ணிக்கைக்கு முன்பு அதனைக் கணிப்பது கடினமாக இருந்தது. எனவேதான், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் ஒன்றைத் தவிர மற்ற அனைத்தும் இரு திராவிடக் கட்சிகளுக்கு வெற்றி என கூறிவந்தன..
‘மௌனமாக வீசிய விஜய் ஆதரவு அலையை பெரும்பாலான தமிழக அரசியல் தலைவர்கள் உணரவில்லை. ஆரம்பம் முதல் போட்டியை திமுக அண்ணா திமுக இடையே என எண்ணி உக்கிர பிரசாரத்தில் இறங்கியவர்கள் ஏமந்ததுத்தான்மிச்சம்.
திமுக கட்சியை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை மற்றும் சீமான் போன்றவர்கள் மட்டுமின்றி இந்திய பிரதமர் மோடி முதற்கொண்டு பாஜகவின் முக்கிய தலைவர்களின் பிரச்சாரமும் , விஜயின் வெற்றிக்கு கை கொடுத்துள்ளது. தமிழக வாக்காளர்களை தங்கள் பக்கம் ஈர்க்க தவறி விட்டது. திமுக மீது மக்களின் வெறுப்பை ஏற்படுத்தியவர்கள், வக்காளர்களின் அபிமானத்தை தங்கள் பக்கம் திருப்ப தவறி விட்டனர் அவர்களின் திமுக மீதான கடும் விமர்சனம் விஜய்க்கு வாக்குகளை திரட்ட உதவி உள்ளது தெளிவாகிறது. மொத்தத்தில் பிரச்சார பீரங்கி இல்லாத விஜிய் கட்சியின் தேவையை அண்ணாமலை மற்றும் சீமான் சரியாக நிறைவு செய்துள்ளனர்.
நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் காங்கிரஸ் கட்சி மட்டுமே ஆட்சி செய்துவந்த தமிழகத்தில் 1967 தேர்தலில் அண்ணா தலைமையில் திராவிடப் புரட்சி ஏற்படுத்தி அரியணையில் அமர்ந்தார்.அதன்பின்னர் நீடித்த திமுக ஆட்சிக்கு 1977 ஆம் ஆண்டு தேர்தல் களம் கண்ட எம்ஜிஆர் முடிவு கட்டினார்.இருப்பினும், எம்ஜிஆர், விஜய் வெற்றிகளில் சில வேற்றுமைகளும் உண்டு. 1977 ல் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கைகோத்துக் களமிறங்கிய எம்ஜிஆர், தனிப்பெரும்பான்மை பெற்று முதல்வர் ஆனார். ஆனால் தனியாக நின்ற விஜயை அதிக இடங்களை கைப் பற்றினாலும் ஆட்சி அமைக்க போதுமான இடங்களை பெற தவறிவிட்டார்.ஆனால், துணிச்சலுடன் தனித்துப் போட்டியிட்டாலும் தனிப்பெரும்பான்மை பெறுவது விஜய்க்கு கடினமாகிவிட்டது.
அதேநேரம், வாக்கு விகிதத்தில் எம்ஜிஆரையும் மிஞ்சிவிட்டார் விஜயின் தவெகவுக்கு சுமார் 35% வாக்குகள் கிடைத்தன. 1977ல் எம்ஜிஆர் தனது முதல் தேர்தலில் பெற்ற வாக்கு விகிதம் 33.5%.
2025 ஜூலை மாதம் பேசிய தவெக தலைவர் விஜய், “தொடர்ந்து வெற்றி பெற்றவர்களின் அதிகார பலத்தை உடைத்து, 1967 மற்றும் 1977 தேர்தல்களில் புதியவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். அதே போல 2026 தேர்தலும் அமையும்,” என கூறி வந்ததாக கூறப்படுகிறது. அவர் சொனனபடியே நிகழ்ந்துள்ளது.
தாம் உறுதியாக முதல்வர் பதவியில் அமர்வேன் என்று ஈராண்டுகளுக்கு முன்னர் 100 விழுக்காடு உறுதியுடன் விஜய் இருந்ததாக அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகர், இப்போது செய்தியாளர்களிடம் தெரிவித்து வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையில்தான் போட்டி என்று தொடர்ந்து முழங்கி வந்தார் விஜய். விஜய் ஆதரவு அலையில் சிக்கி 35 ஆண்டுகளுக்குப் பிறகு தோல்வியை சந்தித்துள்ளார். மு.க. ஸ்டாலின்.. தோல்வியைச் சந்தித்த இரண்டாவது முதல்வர் என்ற பெயர் மு.க. ஸ்டாலினுக்குக் கிடைத்துள்ளது.தேர்தல் களம் பல வியப்புகளை அளித்ததுபோல இனி அமையப்போகும் சட்டமன்றத்திலும் மக்கள் அவற்றைக் காண கூடும். முதல்வராக விஜய்யும் எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலினும் அமரக்கூடிய நிலையையே இதுவரை வெளிவந்த முடிவுகள் உணர்த்துகின்றன.