பண்டார் கன்ட்ரி ஹோம்ஸ் பிரதான சாலை மேம்பாடு: RM130 மில்லியன் திட்டம்

13 செப்டெம்பர் 2026, 8:20 AM
பண்டார் கன்ட்ரி ஹோம்ஸ் பிரதான சாலை மேம்பாடு: RM130 மில்லியன் திட்டம்

ஷா ஆலாம், செப்.13 — பண்டார் கன்ட்ரி ஹோம்ஸ் மக்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்த சுமார் 13 கோடி ரிங்கிட் செலவில் ஜாலான் B27 சாலை மேம்பாட்டுத் திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் பண்டார் கன்ட்ரி ஹோம்ஸ் பகுதியிலிருந்து ராவாங் நகருக்குச் செல்லும் பிரதானப் சாலையில் போக்குவரத்து சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திட்டம் 2026 அல்லது 2027ஆம் ஆண்டில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பண்டார் கன்ட்ரி ஹோம்ஸ் ஏயோன் வணிக வளாகத்திற்கு முன்புறம் அமைந்துள்ள B27 சாலையும் இதில் இடம்பெறும் என்றும் ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வேய் கியாட் தெரிவித்தார்.

இந்தச் சாலை மேம்பாடு, பண்டார் கன்ட்ரி ஹோம்ஸ் மற்றும் சுங்காய் பாக்காவ் பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு பயனளிக்கும் என அவர் குறிப்பிட்டார்.

ராவாங் நகருக்குச் செல்வதற்கான முக்கிய அணுகுவழிகளில் ஒன்றாக இந்தச் சாலை பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தற்போது பண்டார் கன்ட்ரி ஹோம்ஸ் மற்றும் சுங்காய் பாக்காவிலிருந்து ராவாங் நகருக்குச் செல்ல 20 முதல் 30 நிமிடங்கள் வரை ஆகும். சாலை மேம்பாட்டுத் திட்டம் நிறைவடைந்த பின்னர் பயண நேரம் சுமார் 10 நிமிடங்களாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் அப்பகுதி மக்களின் அன்றாடப் பயணம் மேலும் எளிதாகும் என சுவா வேய் கியாட் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பண்டார் கன்ட்ரி ஹோம்ஸ் பகுதியில் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ள ஐந்து புதிய முயற்சிகளில் இந்தச் சாலை மேம்பாட்டுத் திட்டமும் ஒன்றாகும்.

பண்டார் கன்ட்ரி ஹோம்ஸ் பகுதியில் மேற்கொள்ளப்படும் அனைத்து திட்டங்களும், அப்பகுதியின் மேம்பாட்டின் பயனை நேரடியாக மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகும் என சுவா வேய் கியாட் தெரிவித்தார்

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.