கம்போங் கெனாங்காவில் பயனர்களின் வசதிக்காக நடைபாதை மேம்படுத்தப்பட்டது

9 மார்ச் 2026, 8:55 AM
கம்போங் கெனாங்காவில் பயனர்களின் வசதிக்காக நடைபாதை மேம்படுத்தப்பட்டது

ஷா ஆலம், மார்ச் 9 — ரவாங், கம்போங் கெனாங்கா பகுதியில் உள்ள ஜாலான் செகோலா 1 இன் நடைபாதை, பயனர்களின் பாதுகாப்பையும் வசதியையும் உயர்த்துவதற்காக மேம்படுத்தப்பட்டது. கடந்த டிசம்பரில் முழுமையாக நிறைவடைந்த இந்த திட்டத்திற்கு RM130,000 செலவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அச்சாலை மோசமாக சேதமடைந்து, புதர்களால் நிரம்பியிருந்ததால் சுமார் 500 மீட்டர் நீளம் வரை நடைபாதை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக ரவாங் மாநில சட்டமன்ற உறுப்பினர் சுவா வெய் கியாட் தெரிவித்தார்.

“இந்தச் சாலை கம்போங் கெனாங்காவில் வசிப்பவர்களுக்கு முக்கிய பாதையாகும். பெற்றோர்களும் மாணவர்களும் தினமும் பள்ளிக்குச் செல்ல இந்த பாதையைப் பயன்படுத்துகிறார்கள்,” என அவர் குறிப்பிட்டார்.

நடைபாதை அமைக்கும் பணிகள் 2025 அக்டோபரில் தொடங்கி, அதே ஆண்டு டிசம்பரில் முழுமையாக நிறைவடைந்தது எனவும் அவர் கூறினார்.

ரவாங் மாநிலத் தொகுதியில் அடிப்படை வசதிகள் நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்யும் வகையில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளபடும் என்றும் அவர் தெரிவித்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.