ரவாங் மேம்பாலக் கட்டுமான பணிகள்; இரண்டு மாதங்களுக்குச் சாலை மூடல்

18 ஜூன் 2026, 5:37 AM
ரவாங் மேம்பாலக் கட்டுமான பணிகள்; இரண்டு மாதங்களுக்குச் சாலை மூடல்

ஷா ஆலம், ஜூன் 18 - ரவாங், எஃப்டி3209 (FT3209) சாலையில் மேம்பாலத்தின் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்காக, அந்தச் சாலையின் ஒரு பகுதி இன்று முதல் இரண்டு மாதங்களுக்கு மூடப்பட்டு மாற்றுப் போக்குவரத்து வழித்தடம் இயங்கத் தொடங்கியுள்ளது.

கோம்பாக் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ரவாங் தொழில்துறைச் சாலையை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ், சிம்பாங் கோலா காரிங் (CH900 LHS) முதல் சிம்பாங் ஒய்டிஎல் (CH1000 LHS) வரையிலான பகுதிகள் இந்தச் சாலை மூடலில் உள்ளடக்கப்பட்டுள்ளன என ரவாங் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் சுவா வெய் கியாட் தெரிவித்துள்ளார்.

இந்தத் தற்காலிகப் போக்குவரத்து மாற்றம் இன்று, 2026 ஜூன் 18-ஆம் தேதி காலை 10 மணி முதல் தொடங்கி, எதிர்வரும் ஆகஸ்ட் 18-ஆம் தேதி வரை இரண்டு மாதக் காலத்திற்குத் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அந்த வழியைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் தங்களின் வாகனங்களின் வேகத்தைக் குறைப்பதோடு, சீரான பயணத்திற்கு வைக்கப்பட்டுள்ள போக்குவரத்து வழிகாட்டிப் பலகைகளைப் பின்பற்றி நடக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ரவாங் தொழில்துறைச் சாலையின் வாகனக் கொள்ளளவை அதிகரிப்பதற்கும், அப்பகுதியில் வழக்கமாக ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும் இந்த மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதனால், பொதுமக்கள் தங்களின் பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுமாறும், கட்டுமானப் பணிகள் நடைபெறும் காலக் கட்டத்தில் அதிகாரிகளின் உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிந்து நடக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்தக் கட்டுமானப் பணிகள் அல்லது போக்குவரத்து மாற்றம் குறித்த கூடுதல் விவரங்கள் தேவைப்படுவோர், 014-284 6431 அல்லது 011-1453 0014 ஆகிய எண்களில் ஒப்பந்த நிறுவன அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.