செப். 14 முதல் ஜாலான் சையிட் புத்ரா, ஜாலான் இஸ்தானாவில் சாலை மூடல்

12 செப்டெம்பர் 2026, 2:59 AM
செப். 14 முதல் ஜாலான் சையிட் புத்ரா, ஜாலான் இஸ்தானாவில் சாலை மூடல்

கோலாலம்பூர், செப். 12: புதிய பந்தாய் விரைவுச்சாலைத் திட்டத்தின் (NPE 2) கட்டுமானப் பணிகளுக்காகக் கோலாலம்பூரில் ஜாலான் சையிட் புத்ரா மற்றும் ஜாலான் இஸ்தானாவில் சில பகுதிகள் செப்டம்பர் 14ஆம் தேதி முதல் கட்டங்கட்டமாக மூடப்படவுள்ளன.

இந்தச் சாலை மூடல் தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அமுல்படுத்தப்படும் என New Pantai Expressway Sdn Bhd (NPE) தெரிவித்துள்ளது.

கட்டுமானப் பணிகளின் அட்டவணைக்கு ஏற்ப, சம்பந்தப்பட்ட சாலைகளின் சில பகுதிகள் படிப்படியாக மூடப்படுவதுடன், தற்காலிக போக்குவரத்து நிர்வாக முறைகளும் செயல்படுத்தப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாகனமோட்டிகள் தங்களது பயணங்களை முன்கூட்டியே திட்டமிடுவதுடன், சாலைப் பணிகள் நடைபெறும் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள அனைத்து போக்குவரத்து அறிவிப்புப் பலகைகள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

பொதுமக்களுக்கு கூடுதல் தகவல்கள் தேவைப்பட்டால், NPE Infoline 1300-88-1010 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.