ஷா ஆலாம், செப். 7: போர்ட் கிள்ளான், கம்போங் தெலோக் கோங்கில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீச்சம்பவத்தில் அருகருகே அமைந்திருந்த இரு வீடுகள் முற்றாக தீக்கிரையாகின. அதில் ஹோண்டா சிவிக் ரக கார் ஒன்று சேதமடைந்தது.
இச்சம்பவம் தொடர்பான அவசர அழைப்பு அதிகாலை 3.01 மணிக்கு கிடைத்தது என சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கை உதவி இயக்குநர் அஷ்ருல் ரீஸால் அஸ்பார்

தீயணைப்பு வீரர்கள் அதிகாலை 3.12 மணிக்கு சம்பவ இடத்தைச் சென்றடைந்ததாக அவர் தெரிவித்தார்.
தீயணைப்பு வீரர்களின் துரித நடவடிக்கையால் தீ முழுமையாக அணைக்கப்பட்டது. இச்சம்பவத்தில் உயிரிழப்போ அல்லது காயமடைந்தவர்களோ எவரும் பதிவாகவில்லை என்றும் அஷ்ருல் ரீஸால் குறிப்பிட்டார்.

தீ ஏற்படுவதற்கான காரணம் மற்றும் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதத்தின் மதிப்பு தொடர்பான தகவல்கள் விசாரணைக்குப் பின்னர் தெரியவரும்.







