புகைமூட்டம்: லாபுவானில் காற்றுத் தரம் குறித்து சிறப்பு கூட்டம்

7 செப்டெம்பர் 2026, 1:30 AM
புகைமூட்டம்: லாபுவானில் காற்றுத் தரம் குறித்து சிறப்பு கூட்டம்

லாபுவான், செப். 7: லாபுவானில் காற்று மாசுபாடு அதிகரிக்கும் சாத்தியம் தொடர்பில் பொதுமக்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட அரசாங்கத் துறைகள் மற்றும் முகமைகள் இணைந்து சிறப்பு ஒருங்கிணைப்புக் கூட்டத்தை நடத்தின.

சிறப்புக் கூட்டத்தில் தற்போதைய காற்றுத் தர நிலவரம், பொதுமக்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்புக்கு ஏற்படக்கூடிய அபாயங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் விரிவாக மதிப்பாய்வு செய்யப்பட்டன.

இக்கூட்டத்தில், காற்று மாசுபாட்டின் அளவு அதிகரிக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட முகமைகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

அதேவேளை, பள்ளிக்கூடங்களின் செயல்பாடுகள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பான அம்சங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

இதி சுற்றுச்சூழல் துறை, மலேசிய குடிமைத் தற்காப்புப் படை, லாபுவான் கூட்டரசுப் பிரதேச கல்வித் துறை மற்றும் சம்பந்தப்பட்ட பல்வேறு அரசாங்க முகமைகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

காற்றுத் தரத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்வதற்கும், பொதுமக்களுக்கு சமீபத்திய தகவல்களை உரிய நேரத்தில் வழங்குவதற்கும் முகமைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு மிகவும் அவசியமானது என JAS வலியுறுத்தியது.

குறிப்பாக, காற்று மாசுபாட்டின் நிலைமை மோசமடையும் சூழலில் பொதுமக்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து மேற்கொள்வதற்கான தயார்நிலையை இக்கூட்டம் மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.