புகைமூட்டம்: சிலாங்கூரின் 6 பகுதிகளில் ஆரோக்கியமற்ற காற்றின் தரம்

6 செப்டெம்பர் 2026, 1:47 AM
புகைமூட்டம்: சிலாங்கூரின் 6 பகுதிகளில் ஆரோக்கியமற்ற காற்றின் தரம்

ஷா ஆலம், செப் 6 : சிலாங்கூரில் உள்ள ஆறு பகுதிகள் இன்று காலை 8 மணி நிலவரப்படி ஆரோக்கியமற்ற காற்றுத் தூய்மைக்கேடு குறியீட்டை (API) பதிவு செய்துள்ளன.

மலேசிய காற்றுத் தூய்மைக்கேட்டு குறியீட்டு நிர்வகிப்பு அமைப்பின் (APIMS) இணைய அகப்பக்கத் தரவுகளின்படி, இம்மாநிலத்தில் ஜோஹான் செத்தியா (Johan Setia) 179 என்ற புள்ளியைப் பதிவு செய்துள்ளது.

அதைத் தொடர்ந்து ஷா ஆலம் (165), பந்திங் (156), பெட்டாலிங் ஜெயா (155), கிள்ளான் (154) மற்றும் கோலா சிலாங்கூர் (153) ஆகிய பகுதிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

ஒட்டுமொத்தமாக, எட்டு மாநிலங்களில் உள்ள 35 பகுதிகளிலும் , கூட்டரசு பிரதேசத்தின் மூன்று பகுதிகளிலும் ஆரோக்கியமற்ற API அளவை எட்டியுள்ளன.

இதில் சரவாக் மாநிலம் அதிகபட்சமாக 10 இடங்களுடன் முதலிடத்தில் உள்ளது.

அதற்கு அடுத்தபடியாக சிலாங்கூர் (ஆறு), ஜொகூர் (நான்கு), நெகிரி செம்பிலான் மற்றும் சபா தலா மூன்று, மற்றும் பகாங் மற்றும் மலாக்கா தலா இரண்டு இடங்களைப் பதிவு செய்துள்ளன.

கோலாலம்பூரில் இரு ஆரோக்கியமற்ற பகுதிகள் பதிவாகியுள்ள வேளையில், திரெங்கானு, புத்ராஜெயா மற்றும் லபுவான் ஆகிய இடங்களில் தலா ஒரு பகுதியில் காற்று மாசு ஏற்பட்டுள்ளது.

அதே நேரத்தில், சரவாக்கில் உள்ள இரு பகுதிகள் மிகவும் மோசமான (மிகவும் ஆரோக்கியமற்ற) API அளவை எட்டியுள்ளன.

அவை கூச்சிங் (235) மற்றும் ஸ்ரீ அமான் (216) ஆகும்.

ஜொகூர் மாநிலத்தில் ஆரோக்கியமற்ற நிலையை பதிவு செய்த பகுதிகளில் செகாமட் (160), தங்காக்க் (154), பத்து பகாட் (153) மற்றும் குளுவாங் (152) ஆகியவை அடங்கும்.

நெகிரி செம்பிலானில், நீலாய் 167 புள்ளிகளையும், சிரம்பான் 166 புள்ளிகளையும், போர்ட் டிக்சன் 153 புள்ளிகளையும் பதிவு செய்துள்ளன.

சபாவில் கிமானிஸ் (167), கோத்தா கினபாலு பாலிடெக்னிக் (164) மற்றும் கோத்தா கினபாலு (161) ஆகிய பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும், பகாங்கில் ஜெராண்டுட் (166) மற்றும் தெமர்லோ (162), மலாக்காவில் அலோர் காஜா மற்றும் புக்கிட் ரம்பாய் தலா 157, மற்றும் கோலாலம்பூரில் பத்து மூடா மற்றும் செராஸ் தலா 161 புள்ளிகளைப் பதிவு செய்துள்ளன.

புத்ராஜெயா மற்றும் லபுவான் முறையே 162 மற்றும் 161 புள்ளிகளையும், திரெங்கானுவின் பக்கா பகுதி 117 புள்ளிகளையும் பதிவு செய்துள்ளன.

இதற்கிடையில், நாட்டின் 20 பகுதிகள் மிதமான API அளவையும், எட்டு பகுதிகள் நல்ல ஆரோக்கியமான அளவையும் கொண்டுள்ளன. எந்தவொரு பகுதியிலும் அபாயகரமான அளவிலான API பதிவு செய்யப்படவில்லை.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.