நேபாள வெள்ளம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 804 ஆக அதிகரிப்பு; 3,300 பேர் காணவில்லை

31 ஆகஸ்ட் 2026, 3:11 AM
நேபாள வெள்ளம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 804 ஆக அதிகரிப்பு; 3,300 பேர் காணவில்லை

நேபாளம், ஆகஸ்ட் 31: நேபாளம் மற்றும் திபெத் பகுதிகளில் ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 804-ஆக அதிகரித்துள்ளது.

மேலும், சுமார் 3,300 பேரைக் காணவில்லை என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேபாளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இதுவரை 788 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.

அதேவேளை, நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்கள் உட்பட 2,742 பேரை இன்னும் காணவில்லை.

மறுபுறம், சீன அதிகாரிகள் திபெத் பகுதியில் 16 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 546 பேரைக் காணவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போனவர்களைத் தேடும் தேடல் மற்றும் மீட்புப் பணிகள் (SAR) தொடர்ந்து தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சுரங்கப்பாதைகளில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்தியாவிலிருந்து 11 பேர் கொண்ட சிறப்பு குழு உதவி வருகிறது.

பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகளும் தொடர்ந்து முடுக்கிவிடப்பட்டுள்ளன.

வகைantarabangsa

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.