ஷா ஆலாம், செப். 2: ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளைத் தொடர்ந்து, தற்போதைய சூழல் குறித்து விழிப்புடன் இருக்குமாறு கத்தாரில் உள்ள மலேசியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கத்தார் அதிகாரிகள் வெளியிடும் உத்தரவு அல்லது பாதுகாப்பு தொடர்பான அறிவுறுத்தல்களையும் பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தோஹாவில் உள்ள மலேசியத் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.
கத்தாரிலிருந்து அல்லது அங்கிருந்து வேறு இடங்களுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள மலேசியர்கள், விமானங்களின் சமீபத்திய அட்டவணை மற்றும் பயண நிலவரங்களை முன்கூட்டியே சரிபார்த்துக்கொள்ளுமாறும் கேட்டுகொள்ளப்பட்டடது.
கத்தாரில் உள்ள மலேசியர்களுக்கு கூடுதல் தகவல்கள் அல்லது உதவிகள் தேவைப்பட்டால், தோஹாவில் உள்ள மலேசியத் தூதரகத்தைத் தொடர்புகொள்ளலாம்.
அவர்கள் +974 3374 6733 அல்லது +974 4483 6463 என்ற தொலைபேசி எண்களில் தூதரகத்தைத் தொடர்புகொள்ளலாம். மேலும், mwdoha@kln.gov.my என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.







