ஷா ஆலாம், ஆகஸ்ட் 31: பண்டான் இண்டாவில் B40 பிரிவைச் சேர்ந்த 500 பேருக்கு ‘Bakul Rahmah Merdeka’ உதவி வழங்கப்பட்டது.
தாமான் நிர்வானா, பண்டான் ஜெயா மற்றும் கம்போங் டலாம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இந்த உதவியைப் பெற்றனர்.

பெறுநர்களுக்கு அரிசி, சமையல் எண்ணெய், சார்டின் உள்ளிட்ட அன்றாட அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய உணவு பெட்டிகள் வழங்கப்பட்டதாகப் பண்டான் இண்டா சட்டமன்ற உறுப்பினர் டத்தோ இஷாம் ஹாஷிம் தெரிவித்தார்.
மக்களின் தேவைகள், குறிப்பாக வாழ்க்கைச் சுமையை குறைக்க இத்தகைய திட்டங்கள் அவ்வப்போது முன்னெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
அதேவேளை, ஒருவருக்கொருவர் அன்பும் அக்கறையும் காட்டும் சமூகத்தின் மூலம் சுதந்திர தின உணர்வையும் மேலும் வலுப்படுத்த முடியும் என்று அவர் தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.







