புத்ராஜெயா, ஆகஸ்ட் 31: அரசாங்க மருத்துவமனைகளின் டிஜிட்டல் வசதிகளை மேம்படுத்த RM1 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் 15 அரசாங்க மருத்துவமனைகள் பயன்பெறும் என தகவல் தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
முன்னதாக RM650 மில்லியனாக இருந்த இந்த ஒதுக்கீடு தற்போது RM1 பில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அரசாங்க மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளில் மின்னணு மருத்துவப் பதிவேடு எனப்படும் Electronic Medical Record (EMR) முறையைச் செயல்படுத்துவதுடன், இணைய வசதிகளையும் விரைவுபடுத்த முடியும் என்றும் ஃபஹ்மி தெரிவித்தார்.
படாங் பெசார் சுகாதார கிளினிக்கில் முன்னோடித் திட்டமாக செயல்படுத்தப்பட்டுள்ள EMR முறை மூலம், மருத்துவர்கள் நோயாளிகளின் மருத்துவத் தகவல்களை மின்னணு முறையில் நேரடியாக அணுக முடிந்துள்ளது.
இதனால் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் நடைமுறை மேலும் விரைவுபடுத்தப்படுவதுடன், மருத்துவர்களின் நேரமும் சேமிக்கப்படும்.







