நேபாள வெள்ளம்: தொடர்பில் இல்லாத 51 மலேசியர்களின் பட்டியல் வெளியானது

28 ஆகஸ்ட் 2026, 7:16 AM
நேபாள வெள்ளம்: தொடர்பில் இல்லாத  51 மலேசியர்களின் பட்டியல் வெளியானது

கோலாலம்பூர், ஆகஸ்ட் 28: நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் 30-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 537 வெளிநாட்டவர்கள் காணாமல் போயுள்ளதாக நேபாள அதிகாரிகள் வெளியிட்டுள்ள பட்டியலில் தெரிவிக்கப்பட்டது.

அதில் 51 மலேசியர்களும் தற்போது தொடர்பில் இல்லாதவர்களாக அப்பட்டியலில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் Leaf Holiday, Fishtail, Dream Tibet Travel and Tour மற்றும் Kailash Journeys ஆகிய நிறுவனங்கள் மூலம் பயணம் மேற்கொண்டவர்கள் ஆவர்.

தொடர்பில் இல்லாத மலேசியர்களின் பெயர்கள் பின்வருமாறு:

அப்பன்னா முத்தலூ
அருணாசலம் கருப்பையா
அஸ்மான் கரீம்
பாலசிங்கம் கேசவன்
பிரபாகரன் கிருஷ்ணன்
ஈஸ்வரி மணி ராஜ்
கணேசன் ஆனந்தன்
குணநேசன் வெள்ளைசாமி
குணவதி முத்துசாமி
இந்துமதி சுப்பிரமணியம்
ஜேசன் நியோ
கலை மாதே கருப்பையா
கலைசெல்வி நாராயணசாமி
கண்ணன் கிருஷ்ணன்
கருணாநிதி சுந்தரம்
கிருபாநிதி அழகப்பன்
கோமதி ரெத்தினம்
கிருஷ்ணன் வடிவேலு
லெட்சுமி சின்னப்பன்
லிங்கம் சாமிக்கண்ணு
மாலனி வேலு
மங்கள வாணன் கிருஷ்ணசாமி
முகமட் ஃபக்ருல் முனிர் பின் முகமட் ஈசா
முகமட் நோஹான் சாலிம்
முகமட் பாட்சில் தாரோஸ்
முகமட் சானி ஹருல்
முஹமட் நாசிர் அப்துல் தாலிப்
முஹம்மட் ஹாஸிக் இஸ்மாயில்
முருகன் சுப்ரமணியம்
நஹேந்திரன் கணேசன்
நவீன் பழனி
நீலவாணி மாரிமுத்து
பத்மாவதி கோவிந்தசாமி
பூபாலன் முருகாயா
பூர்ணிமா அழகப்பன்
ராஜிதா சிவன்
ராமன் சுப்ரமணியம்
ரவீந்தர் அய்யாவூ
கோமதி சித்தரலிங்கம்
ராமு சவாசாமி
சந்தானலெட்சுமி திருஞானசம்பந்தம்
சரஸ்வதி நாகரத்தினம்
சாரதா அழகப்பன்
ஷாபுதீன் முன்
சுகுணா பாலன்
தனபாலன் முத்து
வள்ளி பழனியசாமி
வனஜா வடிவேல்
வெண்ணிலா முனியாண்டி
விஜயன் பெருமாள்
யோகேஸ்வரி சுப்பிரமணியம்

நேபாள சுற்றுலாத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், “Tourist List (Out of Contact) in Bhotekoshi Flood” என்ற தலைப்பில் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டது.

காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டுள்ள வெளிநாட்டவர்களின் பெயர்கள், அவர்களது பயணங்களை ஏற்பாடு செய்த சில பயண நிறுவனங்களின் பெயர்கள் உள்ளிட்ட விவரங்களும் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

காணாமல் போனவர்களில் இந்திய நாட்டவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த 178 பேர் தொடர்பில் இல்லாத நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அமெரிக்காவைச் சேர்ந்த 65 பேரும், உக்ரைனைச் சேர்ந்த 53 பேரும் காணாமல் போனவர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

காணாமல் போனவர்களின் தற்போதைய நிலை குறித்து அதிகாரப்பூர்வ தகவல்களைப் பெறுவதற்காக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் தூதரகத் தரப்பினர் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வகைantarabangsa

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.