2027 பட்ஜெட் : மக்களின் வாழ்க்கை செலவீனப் பிரச்சனைகளைக் களைவதில் அதிக முக்கியத்துவம்

23 ஆகஸ்ட் 2026, 4:24 AM
2027 பட்ஜெட் : மக்களின் வாழ்க்கை செலவீனப் பிரச்சனைகளைக் களைவதில் அதிக முக்கியத்துவம்

கோலாலம்பூர்,ஆகஸ்ட் 23 - 2027 வரவு செலவுத் திட்டத்தில் மக்களின் வாழ்க்கை செலவீனப் பிரச்சனைகளை முழுமையாக அடையாளம் கண்டு தீர்வு காணும் விவகாரங்களில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தும்.

உலக கச்சா எண்ணெய் விலையின் ஏற்ற இறக்கம் உட்பட பல்வேறு வெளிப்புற தாக்கங்களையும் கருத்தில் கொண்டு அந்த வரவு செலவுத் திட்டம் வரையப்படுமென மடானி அரசாங்கத்தின் பேச்சாளர் டத்தோ ஸ்ரீ பாஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

இங்கு, தாமான் ஸ்ரீ செந்தோசா சந்தையில் கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேசம் மற்றும் புத்ராஜெயா நிலையிலான 2026 ஜாலூர் கெமிலாங் சுதந்திரப் பயணத்தைத் தொடக்கி வைத்தப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.

தொடர்பு அமைச்சர் பாஹ்மி ஃபட்சில் கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேசம் மற்றும் புத்ராஜெயா நிலையிலான 2026 ஜாலூர் கெமிலாங் சுதந்திரப் பயணத்தைத் தொடக்கி வைத்தார். படம் : பெர்னாமா

2027 வரவு செலவுத் திட்டத்தில், மக்களின் பிரச்சனைகளுக்கு விரைந்து தீர்வு காணக் கூடிய திட்டங்களுக்கு முக்கியத்துவம் செலுத்தப்படும். அதே வேளை 13-வது மலேசியத் திட்ட அமலாக்கத்திற்கு உறுதுணையாக இருக்க, உள்நாட்டு, அனைத்துலக முதலீடுகளை ஈர்ப்பதிலும் முயற்சிகள் அதிகரிக்கப்படுமென, ஃபாஹ்மி தெரிவித்தார்.

தொடர்பு துறையைப் பொருத்த வரையில், அனைத்து உட்புறப் பகுதிகளுக்கும் இணைய வசதி கிடைப்பதை உறுதி செய்வதே முக்கிய நோக்கமாக இருக்குமென அவர் கூறினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.