ஸ்ரீ கெம்பாங்கான், ஆகஸ்ட் 22 - 2026 சுக்மா (SUKMA) போட்டியில், பெண்களுக்கான சிலம்பம் தனித்திறமை பிரிவில் சிலாங்கூரைச் சேர்ந்த கிரண்ஜெனிஃபர் டான்சில் வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினர்.
செர்டாங் ஜெயாவில் உள்ள எம்பிஎஸ்ஜே ( MBSJ ) அரங்கில் நடைபெற்ற இப்போட்டியில் அவர் 8.467 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
பினாங்கு மாநில வீராங்கனை 8.703 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கத்தை வென்றார். இதில் பேராக் மாநிலம் 8.700 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றது.
இப்பிரிவில், குறுகிய வித்தியாசத்திலே வெற்றியாளர்களின் பதக்கம் மாறுபட்டது, அப்பிரிவில் போட்டியாளர்களிடையே கடும் போட்டி நிலவியதைக் காண்பித்தது.
இவ்வேளையில், கிரண்ஜெனிஃபர் வென்ற இந்த வெண்கலப் பதக்கம், போட்டியை நடத்தும் சிலாங்கூர் மாநிலத்தின் ஒட்டுமொத்த பதக்க எண்ணிக்கையை உயர்த்த உதவியது.








