2026 எஸ்.பி.எம் தேர்வு அட்டவணை இன்று வெளியிடப்படும்

18 ஆகஸ்ட் 2026, 4:26 AM
2026 எஸ்.பி.எம் தேர்வு அட்டவணை இன்று வெளியிடப்படும்

கோத்தா பாரு, ஆகஸ்ட் 18: கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக்கின் ஒப்புதல் கிடைத்ததும், 2026ஆம் ஆண்டுக்கான எஸ்.பி.எம் (SPM) தேர்வு அட்டவணை இன்று மாலை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

இதனை கல்வி தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் முகமட் அசாம் அஹ்மாட் தெரிவித்தார்.

தேர்வு அட்டவணையில் முன்மொழியப்பட்டுள்ள மேம்பாடுகள் தொடர்பான பரிந்துரைகள், தேர்வு வாரியத்தின் துணை இயக்குநரால் இன்று கல்வி அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டு, பரிசீலனை மற்றும் ஒப்புதலுக்கு முன்வைக்கப்படும் என்றார் அவர்.

எந்தவொரு சிக்கலும் இன்றி இருந்தால், 2026 SPM தேர்வு அட்டவணையை இன்று மாலை வெளியிடுவோம் என்று அவர் கூறினார்.

புதிய தேர்வு அட்டவணையைத் தயாரிக்கும் போது பல்வேறு தரப்பினரின் கருத்துகள் கவனத்தில் கொள்ளப்பட்டதாக முகமட் அசாம் விளக்கினார்.

வடகிழக்கு பருவமழை, ஆண்டு இறுதியில் ஏற்படக்கூடிய புகைமூட்டம் மற்றும் பள்ளி விடுமுறை காலம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளும் புதிய தேர்வு அட்டவணையைத் தயாரிக்கும் போது விரிவாக ஆய்வு செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

தேர்வு அட்டவணை காரணமாக மாநில கல்வித் துறை (JPN), மாவட்ட கல்வி அலுவலகம் (PPD) மற்றும் பள்ளிகளின் நிர்வாகத்தில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாத வகையில் அனைத்து அம்சங்களும் கவனமாக பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

தேர்வு அட்டவணையில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு மாற்றமும் தேர்வை எழுதவுள்ள மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களின் நலன்களையும் கருத்தில் கொண்டதாக இருக்க வேண்டும் என்றும் முகமட் அசாம் வலியுறுத்தினார்.

தேர்வு அட்டவணை எப்போது அறிவிக்கப்படும் என்பது தொடர்பான கேள்விகள் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்ட நிலையில், இன்று மாலை அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.