கோத்தா பாரு, ஆகஸ்ட் 17 — தாமதமான திருமணம், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு மற்றும் கர்ப்பத்தைத் தள்ளிப்போடும் போக்கு ஆகியவை மலேசியாவில் கருவுறுதல் விகிதம் குறைந்து வருவதற்கான முக்கிய காரணிகளாக அமைந்துள்ளன.
இதனை தேசிய மக்கள் தொகை மற்றும் குடும்ப மேம்பாட்டு வாரியமான LPPKN தெரிவித்துள்ளது.
நாட்டின் கருவுறுதல் விகிதம் (TFR) 2010ஆம் ஆண்டில் ஒரு பெண்ணுக்கு சராசரியாக 2.1 குழந்தைகள் என்ற நிலையில் இருந்து, 2022ஆம் ஆண்டில் 1.6 குழந்தைகளாகக் குறைந்துள்ளது என LPPKN தலைமை இயக்குநர் டத்தோ அப்துல் ஷுகூர் அப்துல்லா கூறினார்.
கடந்த சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு பெண்களின் திருமண வயது சராசரியாக 24ஆக இருந்த நிலையில், தற்போது அது சுமார் 27 வயதாக அதிகரித்துள்ளது.
ஆண்களின் சராசரி திருமண வயது தற்போது சுமார் 30 வயதாக உள்ளது என அப்துல் ஷுகூர் தெரிவித்தார்.
“தம்பதிகள் கர்ப்பத்தைப் பெறுவதையும் தாமதப்படுத்துகின்றனர். ஆனால், பெண்களின் கருவுறும் திறன் பொதுவாக 15 முதல் 49 வயதுக்குள் காணப்படுவதுடன், 35 வயதுக்குப் பின்னர் அது குறையத் தொடங்குகிறது,” என்று அவர் குறிப்பிட்டார்.







