சுக்மாவின் முதல் இரு தங்கப் பதக்கங்கள் சிலாங்கூர் வசமாகின

13 ஆகஸ்ட் 2026, 7:47 AM
சுக்மாவின்  முதல் இரு தங்கப் பதக்கங்கள் சிலாங்கூர் வசமாகின
சுக்மாவின்  முதல் இரு தங்கப் பதக்கங்கள் சிலாங்கூர் வசமாகின
சுக்மாவின்  முதல் இரு தங்கப் பதக்கங்கள் சிலாங்கூர் வசமாகின
சுக்மாவின்  முதல் இரு தங்கப் பதக்கங்கள் சிலாங்கூர் வசமாகின

கிள்ளான், ஆகஸ்ட் 13 - 3x3 ஆண்கள் மற்றும் பெண்கள் கூடைப்பந்து போட்டிகளில் சிலாங்கூர் அணி முதல் இரு தங்கப் பதக்கங்களை வென்றது.

அதன் மூலம் சிலாங்கூர் அணி, சுக்மா பதக்கப் பட்டியலில் தனது பதக்க எண்ணிக்கையை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இங்குள்ள புக்கிட் திங்கி கூடைப்பந்து மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டிகளில், இரு அணிகளும் கூட்டரசு பிரதேச அணியைத் தோற்கடித்து தங்களது சொந்த மைதானத்தில் தங்களது ஆதிக்கத்தை நிரூபித்தன.

முதலில் விளையாடிய பெண்கள் அணி, கூட்டரசு பிரதேச அணியை 21-4 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி சிலாங்கூர் மாநிலத்திற்கான முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தது.

இந்த வெற்றியின் மூலம், கடந்த 2024-ஆம் ஆண்டு சரவாக் சுக்மா போட்டியில் தாங்கள் வென்ற தங்கப் பதக்கத்தை சிலாங்கூர் பெண்கள் அணி வெற்றிகரமாகத் தக்கவைத்துக் கொண்டது.

படம் : மீடியா சிலாங்கூர்

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆண்கள் பிரிவிலும் சிலாங்கூர் அணி அதே வேகத்தைத் தொடர்ந்தது.

இறுதிப் போட்டியில் கூட்டரசு பிரதேச அணியை 21-13 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியதன் மூலம், 3x3 கூடைப்பந்து பிரிவில் உள்ள இரு தங்கப் பதக்கங்களையும் சிலாங்கூர் அணி முழுமையாகக் கைப்பற்றி சாதனை படைத்தது.

படம்: மீடியா சிலாங்கூர்

வகைsukankini

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.