காமன்வெல்த்தில் அப்துல் லத்தீஃப்பிற்கு தங்கம்; 5 தங்க இலக்கை எட்டியது மலேசியா

29 ஜூலை 2026, 3:25 AM
காமன்வெல்த்தில் அப்துல் லத்தீஃப்பிற்கு தங்கம்; 5 தங்க இலக்கை எட்டியது மலேசியா
காமன்வெல்த்தில் அப்துல் லத்தீஃப்பிற்கு தங்கம்; 5 தங்க இலக்கை எட்டியது மலேசியா
காமன்வெல்த்தில் அப்துல் லத்தீஃப்பிற்கு தங்கம்; 5 தங்க இலக்கை எட்டியது மலேசியா

கிளாஸ்கோ, ஜூலை 29 - 2026 கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் மலேசியா, 5 தங்கப் பதக்கங்களை வெல்லும் அதன் இலக்கை எட்டியிருக்கிறது.

T20 நீளம் தாண்டும் பிரிவின் உலக சாதனையாளரான டத்தோ அப்துல் லத்திஃப் ரொம்லி, நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் நாட்டின் ஐந்தாவது தங்கப் பதக்கத்தை வென்றார்.

அதே பிரிவில், சக வீரரான எல்ஜோ கோட்டுவோ (Eljoe Gotuoh) மூன்றாவது இடத்தைப் பிடித்து நாட்டிற்கு வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தார்.

29 வயதான அப்துல் லத்திஃப் தனது மூன்றாவது முயற்சியின்போது 7.17 மீட்டர் நீளம் தாண்டி முதலிடத்தைத் தனதாக்கிக் கொண்டார்.

மூன்றாவது இடத்தைப் பிடித்த எல்ஜோ கோட்டுவோ தாண்டியத் தூரம் 6.51 மீட்டராகும். 6.66 மீட்டர் தூரத்தைத் தாண்டிய கனடாவின் நோவா வுசிக்ஸ் (Noah Vucsics) வெள்ளிப் பதக்கம் வென்றார்.

முன்னதாக, மற்றொரு போட்டியில் பளுதூக்கும் வீரர் ஹஃபிசுட்டின் ரொஸ்லின், ஆடவருக்கான 88 கிலோகிராம் பிரிவில் நாட்டின் நான்காவது தங்கப் பதக்கத்தை வாகை சூடினார்.

Malaysia's Muhammad Hafizuddin Rosli competes in the men's 88kg weightlifting event at the Glasgow 2026 Commonwealth Games at the Scottish Event Campus (SEC) Armadillo in Glasgow, Scotland, on July 29, 2026. Hafizuddin won the gold medal with a combined lift of 345kg. — Picture by BERNAMA

22 வயதான அவர் ஸ்னெச் (snatch)முயற்சியின்போது 162 கிலோவையும் கிளின் என் ஜெர்க் (clean & jerk) முயற்சியின்போது 183 கிலோவையும் தூக்கி மொத்தம் 345 கிலோ எடையை வெற்றிகரமாகத் தூக்கினார்.

காமன்வெல்த் போட்டியில் முதல் முறையாக களமிறங்கிய அவர் அப்போட்டிக்கான புதிய சாதனையையும் படைத்தார்.

இதனிடையே, மலேசியா, புல்விவெளி பந்து வீசும் பிரிவின் (lawn bowl) வாயிலாக இரு வெள்ளிப் பதக்கங்களை வென்றது.

பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் அலீனா அஹ்மாட் நவாவி, ஷஃபிகா ஹய்டார் அஃபிப் அப்துல் ரஹ்மான் இணையினரும், ஆடவருக்கான தனிநபர் பிரிவில் இசாட் ஷாமீர் சுல்கிப்ளியும் அந்த பதக்கங்களை வென்றனர்.

Malaysia's Izzat Shameer Dzulkeple competes against Cecil Alexander of the Falkland Islands in the men's singles lawn bowls event at the Glasgow 2026 Commonwealth Games at the Scottish Event Campus (SEC) in Glasgow, Scotland, on July 23, 2026. Izzat won the match 10-3, 7-4. — Picture by BERNAMA

மலேசியா காமன்வெல்த் பதக்கப் பட்டியலில், ஐந்து தங்கம், இரு வெள்ளி, மூன்று வெண்கலப் பதக்கங்களுடன் ஆறாவது இடத்தில் உள்ளது.

வகைsukankini

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.