சிலாங்கூர் 30 ரிங்கிட் பொதுப் போக்குவரத்து மானியத்தை Rapid On-Demand சேவைக்கும் பயன்படுத்தலாம்

11 ஆகஸ்ட் 2026, 2:27 AM
சிலாங்கூர் 30 ரிங்கிட் பொதுப் போக்குவரத்து மானியத்தை Rapid On-Demand சேவைக்கும்  பயன்படுத்தலாம்

ஷா ஆலாம், ஆகஸ்ட் 11 — சிலாங்கூர் மாநில அரசாங்கம் NINE செயலி மூலம் வழங்கும் மாதம் 30 ரிங்கிட் பொதுப் போக்குவரத்து மானியத்தை இனி Rapid On-Demand சேவைக்கும் பயன்படுத்த முடியும்

இதன் மூலம், வழக்கமான பேருந்து சேவைகள் மற்றும் Kumpool சென்றடையாதப் பகுதிகளுக்குப் பயணம் செய்யும் பொதுமக்களுக்கு அதிகமான போக்குவரத்து தேர்வுகள் கிடைக்கும் என சிலாங்கூர் மாநில போக்குவரத்து துறை ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.

இதற்கிடையில், இந்த மானியத் திட்டம் படிப்படியாக இரண்டு கட்டங்களாக அமல்படுத்தப்படுகிறது. முதல்கட்டம் கடந்த ஜூன் மாதம் மத்தியில் தொடங்கிய நிலையில், இரண்டாம் கட்டம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் மத்தியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக இங் ஸீ ஹான் குறிப்பிட்டார்.

முதற்கட்டத்தில், Kumpool மூலம் வழங்கப்படும் தேவைக்கேற்ப இயக்கப்படும் போக்குவரத்து சேவை அல்லது DRT அறிமுகப்படுத்தப்பட்டது.

இரண்டாம் கட்டத்தில், DRT சேவையுடன், KTM கொம்யூட்டர் ரயில் சேவை மற்றும் நிறுத்தம் கொண்ட பேருந்து சேவைகளுக்கும் விரிவுபடுத்தப்படுவதுடன், தற்போது Rapid On-Demand சேவையும் புதிய தேர்வாக இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த மானியம் மற்றும் பொதுப் போக்குவரத்து சேவைகள் தொடர்பான கூடுதல் தகவல்களைப் பெற விரும்புவோர் 03-5544 7000 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.