பாசிர் கூடாங் அணையில் இரு சிறுவர்கள் சடலமாக மீட்பு

10 ஆகஸ்ட் 2026, 9:40 AM
பாசிர் கூடாங் அணையில் இரு சிறுவர்கள் சடலமாக மீட்பு

ஜோகூர் பாரு, ஆகஸ்ட் 10 — நேற்று காணாமல் போன இரு சிறுவர்கள், பாசிர் கூடாங், தாமான் சயின்டெக்ஸில் உள்ள ஓர் அணைக்கட்டு நீர்ப்பகுதியில் இன்று அதிகாலை நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர்.

உயிரிழந்தவர்கள் 12 வயதான முகமட் ஹைக்கல் ரம்சி முகமட் கைருடி மற்றும் 11 வயதான முகமட் ஆதம் பாரிஷ் அர்மான் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

முதலில் 12 வயது சிறுவனின் உடல் இன்று அதிகாலை 2.12 மணியளவில் மீட்கப்பட்டதாகப் பாசிர் கூடாங் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையின் மூத்த நடவடிக்கைத் தளபதி துணை தீயணைப்பு கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

சுமார் இரண்டு மீட்டர் ஆழமுள்ள நீரில், ஆற்றங்கரையிலிருந்து மூன்று மீட்டர் தொலைவில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, 11 வயது சிறுவனின் உடல் அதிகாலை 2.33 மணியளவில் அதே இரண்டு மீட்டர் ஆழத்தில் இருந்து மீட்கப்பட்டது. அவரது உடல் ஆற்றங்கரையிலிருந்து சுமார் 15 மீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டது.

மீட்கப்பட்ட இரு சிறுவர்களின் சடலங்களும் மேல் நடவடிக்கைகளுக்காகக் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளைப் போலீஸ் மேற்கொண்டு வருகிறது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.