முருகன் கல்வி நிலையத்தின் ஸ்கந்த வேள்வி 2026- தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் மாண்புமிகு ஆர். யுனேஸ்வரன் கலந்து கொண்டார்

12 ஜனவரி 2026, 6:57 AM
முருகன் கல்வி நிலையத்தின் ஸ்கந்த வேள்வி 2026- தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் மாண்புமிகு ஆர். யுனேஸ்வரன் கலந்து கொண்டார்
முருகன் கல்வி நிலையத்தின் ஸ்கந்த வேள்வி 2026- தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் மாண்புமிகு ஆர். யுனேஸ்வரன் கலந்து கொண்டார்

கோலாலம்பூர், ஜன 12- ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் ஸ்கந்த வேள்வி 2026” விழாவை முன்னிட்டு, ஸ்ரீ முருகன் சென்டர் (SMC) ஏற்பாடு செய்த “பிரம்மாஸ்திரா” ஆன்லைன் கல்வித் திட்டத்தின் செயல்பாட்டை நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டு துணையமைச்சர் மாண்புமிகு ஆர்.யுனேஸ்வரன் அவர்கள் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

இந்த நிகழ்வு, புதிய கல்வியாண்டின் தொடக்கத்தை குறிக்கும் ஒரு முக்கியமான விழாவாக அமைந்தது. ஸ்ரீ முருகன் சென்டர் (SMC) 1982ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஒரு தன்னார்வ அமைப்பாகும். நாட்டிலுள்ள இந்திய மாணவர்களின் கல்வித் தரத்தையும் கல்விச் சிறப்பையும் உயர்த்துவதே இதன் முதன்மை நோக்கமாகும்.

கடந்த நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக, கல்விச் சாதனைகளோடு மட்டுமல்லாமல், மாணவர்களின் ஒழுக்கம், பண்பு, சுயக்கட்டுப்பாடு மற்றும் நற்பண்புகளை வளர்ப்பதிலும் SMC முக்கிய பங்காற்றி கொண்டுள்ளது.

ஸ்கந்த வேள்வி 2026 தொடக்கம், கல்வியில் ஒரு புதிய பரிமாணத்தை குறிக்கிறது. கல்விச் சிறப்புடன் இணைந்து, குணநலன் உருவாக்கம் மற்றும் மனிதவளத் திறன்களின் மேம்பாட்டை ஒருங்கிணைக்கும் முழுமையான கல்வி அணுகுமுறையை இந்த முயற்சி வலியுறுத்துகிறது.

இதனை மேலும் வலுப்படுத்தும் வகையில், பிரம்மாஸ்திரா ஆன்லைன் கல்வித் தளம் தற்போது 11 மாநிலங்களில் உள்ள 528 தமிழ் தேசியப் பள்ளிகளுக்கு (SJKT) விரிவுபடுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. எதிர்காலத் தலைமுறையை போட்டித்திறன் மிக்கவர்களாக உருவாக்க TVET மற்றும் STEM கல்வி முக்கியத் தூண்களாக இருப்பதை துணையமைச்சர் ஆர்.யுனேஸ்வரன் வலியுறுத்தினார்.

கல்வி என்பது தேர்வு முடிவுகளுக்கு மட்டுப்பட்டதல்ல; சமநிலைமிக்க, திறன் வாய்ந்த, நல்லொழுக்கம் கொண்ட மனிதர்களை உருவாக்கும் ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும்.

மேலும், கல்வி அமைச்சகம் (KPM) வழியாக மடாணி அரசின் தெளிவான நிலைப்பாட்டையும் அவர் தெரிவித்தார்.

மாண்புமிகு கல்வி அமைச்சர், எதிர்காலத்தில் UPSR மற்றும் PT3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்துவது குறித்த பரிந்துரைகளை தீவிரமாக பரிசீலித்து கொண்டிருக்கிறார். இது பெற்றோருக்கு நம்பிக்கை அளிக்கும் ஒரு நல்ல செய்தியாகும். கல்வி தொடர்பான மக்கள் குரல்களை எப்போதும் செவிமடுக்கும், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடாணி அரசின் அர்ப்பணிப்பை இது வெளிப்படுத்துகிறது.

கல்வியை மேம்படுத்த தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு கொண்டிருக்கும் SMC, பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் அனைத்து தரப்பினருக்கும் எனது உச்சபட்ச பாராட்டுகளையும் நன்றிகளையும் துணையமைச்சர் ஆர். யுனேஸ்வரன் அவர்கள் தெரிவித்து கொண்டார்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.