ஷா ஆலாம், ஆகஸ்ட் 4 - நேற்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு மறைந்த ஆசிரியை சுதாவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பில் அவருடன் நகராண்மைக் குழு உறுப்பினர், இந்திய சமூகத் தலைவர் (KKI) மற்றும் சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளிகளின் (SJKT) சிறப்பு செயலாக்கக் குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
மறைந்த ஆசிரியை சுதாவின் இழப்பு குடும்பத்தினருக்கும் சமூகத்திற்கும் ஈடுசெய்ய முடியாத ஒன்று எனவும் பாப்பாராய்டு தெரிவித்தார்.
மேலும், அக்குடும்பத்தினருக்கு மனவலிமையும் அமைதியும் கிடைக்க அனைவரும் பிரார்த்தனை செய்து, இந்தக் கடினமான நேரத்தில் அவர்களுடன் துணை நிற்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.









