ஷா ஆலாம், ஜூலை 26 : சிலாங்கூரின் ஊட்டச்சத்து திட்டத்தின்' (Program Nutrisi Selangor) கீழ் வழங்கப்படும், பள்ளிக்கூட மாணவர்களுக்கான இலவச காலை உணவு உதவியின் மூலம், இம்மாநிலத்தில் உள்ள 962 பள்ளிகளைச் சேர்ந்த 106,000 மாணவர்களை பயன்பெறவுள்ளனர்.
அத்திட்டம் ஆகஸ்ட் 3 முதல் டிசம்பர் 3 வரை செயல்படுத்தப்படும்.
அதற்காக ஒதுக்கப்பட்ட மொத்தம் RM14.4 மில்லியன் தொகையின் மூலம், 2,000 ரிங்கிட்டுக்கும் குறைவான வருமானம் கொண்ட B40 குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயனடைவார்கள் என சிலாங்கூர் மாநில அரசாங்க செயலக அலுவலகம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தது.
"பள்ளி சிற்றுண்டி சாலைகள் மூலம் வாரத்திற்கு இரு முறை வழங்கப்படும் இந்த உணவு உதவி, மாணவர்கள் தங்களது கற்றல் நடவடிக்கையைத் தொடங்குவதற்கு முன் சீரான ஊட்டச்சத்தைப் பெறுவதை உறுதி செய்யுமென" அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.







