கோலாலம்பூர், ஜூலை 26 : அரச மலேசிய போலீஸ் படையில் 35 ஆண்டுகள் சேவையாற்றிய துணைத் தலைமை போலீஸ் அதிகாரி டான்ஸ்ரீ அயோப் கான் மைடின் பிச்சை, இன்றுடன் தமது பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
இதனைத் தொடர்ந்து, அவர் வகித்து வந்த பதவிக்கு புக்கிட் அமான் சிறப்புப் பிரிவின் இயக்குனர் டத்தோஸ்ரீ இப்ராகிம் டாருஸ் தற்காலிகமாகப் பொறுப்பேற்கிறார்.
துணைத் தலைமை போலிஸ் அதிகாரிக்கான இந்த அதிகாரப்பூர்வ பொறுப்பு ஒப்படைப்பு நிகழ்ச்சி, கோலாலம்பூரில் புலாபோல் (PULAPOL) போலீஸ் பயிற்சி மையத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி நாட்டின் தலைமை போலிஸ் அதிகாரி டான்ஸ்ரீ முகமட் காலித் இஸ்மாயில் முன்னிலையில் நடைபெற்றது.






