பழைய காராக் சாலையில் அதிகாலை விபத்தில் அறுவர் பலி

25 ஜூலை 2026, 3:10 AM
பழைய காராக் சாலையில் அதிகாலை விபத்தில் அறுவர் பலி

குவாந்தான், ஜூலை 25 - தெமர்லோ நோக்கிச் செல்லும் ஜாலான் காராக் லாமா (Jalan Karak Lama) சாலையில் , இன்று (சனிக்கிழமை ஜூலை 25) அதிகாலையில், காரொன்று ஒரு டன் எடையுள்ள லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஆறு ஆடவர்கள் உயிரிழந்தனர்.

பெந்தோங், கிளினிக் டேசா ஜம்புரியாஸ் (Klinik Desa Jambu Rias) அருகே இவ்விபத்து நிகழ்ந்தது.

அதிகாலை 4.24 மணிக்கு இந்த விபத்து குறித்து அவசர அழைப்பு வந்ததாக பகாங் தீயணைப்பு- மீட்புத் துறையின் உதவி நடவடிக்கை இயக்குனர் முகமட் சலாஹுதீன் ஈசா தெரிவித்தார்.

"காரில் பயணம் செய்த ஆறு ஆடவர்களும் வாகனத்திற்குள் சிக்கிக்கொண்டனர். அவர்கள் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக சுகாதார அமைச்சின் பணியாளர்கள் உறுதிப்படுத்தினர்," என்று முகமட் சலாஹுதீன் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தார்.

ஒரு டன் லாரியின் ஓட்டுநர் காயமடைந்து, சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

"உயிரிழந்த அறுவரின் உடல்களும் அடுத்தகட்ட நடவடிக்கைக்காக போலிசிடம் ஒப்படைக்கப்பட்டன. -பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.