கிளந்தான்: காவல் நிலையப் பொறுப்பாளர்கள் நாளொன்றுக்கு குறைந்தது போதைப்பொருள் தொடர்பான ஒரு கைது நடவடிக்கையாவது மேற்கொள்ள வேண்டும்

21 ஜூலை 2026, 8:55 AM
கிளந்தான்: காவல் நிலையப் பொறுப்பாளர்கள் நாளொன்றுக்கு குறைந்தது போதைப்பொருள் தொடர்பான ஒரு கைது நடவடிக்கையாவது மேற்கொள்ள வேண்டும்

கோத்தா பாரு, ஜூலை 21 — போதைப்பொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் புதிய உத்தியாக, மாநிலத்தின் அனைத்து காவல் நிலையப் பொறுப்பதிகாரிகளும் (OCS) ஜூலை 15 முதல் தினமும் குறைந்தபட்சம் ஒரு போதைப்பொருள் கைது நடவடிக்கையையாவது மேற்கொள்ள வேண்டும் என கிளந்தான் மாநிலக் காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

அமலாக்க நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்ட போதிலும் போதைப்பொருள் தொடர்பான கைதுகளின் புள்ளிவிவரங்கள் சரிவைக்காட்டியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கிளந்தான் மாநிலப் போலீஸ் கமிஷனர் டத்தோ முகமட் யூசோஃப் மாமாட் தெரிவித்தார்.

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், போதைப்பொருள் வழக்குகள் 13 சதவீதம் குறைந்து 13,957 வழக்குகளாகப் பதிவாகியுள்ளன (கடந்த ஆண்டின் இதே காலத்தில் 15,051 வழக்குகள்). அதேபோல், கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 10 சதவீதம் குறைந்து 14,640 நபர்களாக உள்ளது (கடந்த ஆண்டு 16,182 நபர்கள்).

அதேவேளையில், மாவட்ட குற்றவியல் போதைப்பொருள் விசாரணைப் பிரிவு தலைவர்கள் விநியோகிஸ்தர்கள் மற்றும் வியாபாரிகள் மீதும், மாநிலக் காவல்துறை தலைமையகத்தின் (IPK) போதைப்பொருள் விசாரணைத் துறை பெரிய அளவிலான கடத்தல் கும்பல்கள் (Syndicates) மீதும் கவனம் செலுத்துவார்கள்," என்றும் அவர் கூறினார்.

இந்த புதிய திட்டத்தின் செயல்திறன் மூன்று மாதங்களுக்குப் பிறகு மறுஆய்வு செய்யப்பட்டு மதிப்பிடப்படும் என்றும், நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடையத் தவறும் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை பரிசீலிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.