கோலாலம்பூர், ஜுலை 19 - இன்று மதியம் உலகம் முழுவதும் ஃபேஸ்புக்கின் சேவை தடைப்பட்டிருந்த நிலையில், பயனர்கள் அந்த சமூக ஊடகத்தை மீண்டும் முழுமையாக பயன்படுத்த முடிந்துள்ளது.
கணினி உட்பட அனைத்து கருவிகளின் மூலம், ஃபேஸ்புக்கை இயக்க முடிவதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.
பேஸ்புக் மீண்டும் செயல்படத் தொடங்கியதை அதன் பயனர்கள் பரவலாக பதிவிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
முன்னதாக, மலேசியா உட்பட உலகம் முழுவதையும் சேர்ந்த பயனர்கள், பேஸ்புக்கை பயன்படுத்த முடியவில்லை என ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.
ஒரு சாரார் தங்களது சமூக ஊடக பக்கத்தை திறக்க முடியவில்லை எனவும் மேலுமொரு தரப்பினர் படம் அல்லது காணொளியைப் பதிவேற்றம் செய்யமுடியவில்லை எனவும், மெசெஞ்சர் மூலம் தகவல் அனுப்ப முடியவில்லை எனவும் கூறியிருந்தனர்.







