புத்ராஜெயா, ஆகஸ்ட் 18 — மலேசியாவில் நீக்கக் கோரப்பட்ட இணைய சூதாட்டம் மற்றும் மோசடி (scam) தொடர்பான உள்ளடக்கங்கள் பேஸ்புக் தளத்தில் அதிகளவில் இடம்பெற்றுள்ளதாக தகவல் தொடர்புத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
ஜனவரி 1 முதல் ஆகஸ்ட் 17 வரை மொத்தம் 470,593 உள்ளடக்கங்கள் நீக்கக் கோரப்பட்டதாகவும், அவற்றில் 436,661 அல்லது 93 விழுக்காடு உள்ளடக்கங்களை சம்பந்தப்பட்ட தளங்கள் நீக்க ஒப்புக்கொண்டதாகவும் ஃபஹ்மி தெரிவித்தார்.
அவற்றில் 64 விழுக்காடு இணைய சூதாட்டம், 27 விழுக்காடு மோசடி தொடர்பானவையாகவும் இருந்தன.
ஊடகத் தளங்கள், தீங்கு விளைவிக்கும் மற்றும் வழிகாட்டுதல்களை மீறும் உள்ளடக்கங்களை முன்கூட்டியே கண்டறிந்து, நீக்க வேண்டும் என்று ஃபஹ்மி வலியுறுத்தினார்.






