தெஹ்ரான், ஜூலை 16 - வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் புதிய தாக்குதல்களை நடத்தியுள்ளது.
அதே நேரத்தில் வாஷிங்டன், ஈரான் முழுவதிலும் உள்ள தளங்கள் மீது ஒரே இரவில் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தியது.
போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அவர்களின் ஆரம்பகட்ட ஒப்பந்தத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், புதுப்பிக்கப்பட்ட மோதல்களின் ஆறாவது நாளில், ஜோர்டான், குவைத் மற்றும் பஹ்ரைன் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இலக்குகளைத் தான் தாக்கியதாக ஈரான் கூறியுள்ளது.
இதற்கிடையில், ஹார்முஸ் நீரிணையில் "அப்பாவிக் கடற்படையினரை அச்சுறுத்தும் ஈரானின் ஆற்றலைக் குறைப்பதற்காக" பல இடங்களில் ஆறு மணி நேரத் தாக்குதலை நடத்தியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
ஈரான் பேச்சுவார்த்தைக்குத் திரும்பாவிட்டால், அது "ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும்" அல்லது மேலும் ராணுவ நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்ததை அடுத்து இந்த சமீபத்திய மோதல்கள் நடந்துள்ளன.
இவ்வேளையில், நாட்டிற்குப் பயனளிக்காத எந்தவோர் ஒப்பந்தத்திற்கும் கட்டுப்படுவதற்கு ஈரானுக்கு "எந்தக் காரணமும் இல்லை" என அந்நாட்டின் முதன்மை பேச்சுவார்த்தையாளர் முகமட் பாகர் காலிபாஃப் தெரிவித்திருக்கிறார்.







