எல்ஆர்டி3-இன் வசதிகளைப் பொதுமக்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்: ராஜா மூடா வேண்டுகோள்

14 ஜூலை 2026, 6:40 AM
எல்ஆர்டி3-இன் வசதிகளைப் பொதுமக்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்: ராஜா மூடா வேண்டுகோள்

ஷா ஆலாம், ஜூலை 14 - புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஷா ஆலாம் வழித்தட இலகு ரயில் போக்குவரத்து 3 (LRT3) வசதிகளைப் பொதுமக்கள் தங்களின் அன்றாடப் பயன்பாட்டிற்குச் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ராஜா மூடா சிலாங்கூர் தெங்கு அமீர் ஷா வலியுறுத்தியுள்ளார்.

இந்த நவீனப் போக்குவரத்து வசதியானது சமூகங்களை ஒன்றிணைப்பதோடு மட்டுமல்லாமல், தடையற்ற மற்றும் நிலையான போக்குவரத்து முறையின் மூலம் தினசரி பயணங்களின் செயல்திறனை மேம்படுத்தும் என அவர் தெரிவித்தார்.

மேலும், இத்திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்த தங்களின் உழைப்பு, நிபுணத்துவம் மற்றும் அர்ப்பணிப்பை வழங்கிய 13,000-க்கும் மேற்பட்ட நபர்களுக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வதாக அவர் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.