ad

சிலாங்கூர் அரச திருமண வரவேற்பு: 'சந்துனான் காசே' நிகழ்வு இன்று நடைபெறுகிறது

7 நவம்பர் 2025, 4:24 AM
சிலாங்கூர் அரச திருமண வரவேற்பு: 'சந்துனான் காசே' நிகழ்வு இன்று நடைபெறுகிறது

ஷா ஆலாம், நவ 7- சிலாங்கூர் இளவரசர் தெங்கு அமீர் ஷா மற்றும் யாங் முலியா டத்தின் படுக்கா ஶ்ரீ அஃப்சா ஃபாதினி ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்வை ஒட்டி, மக்கள் பங்கேற்கும் "சந்துனான் காசே பெங்கண்டின் திராஜா பெர்ஸாமா ரக்யாட்" (Santunan Kasih Pengantin Diraja Bersama Rakyat) எனும் சிறப்பு நிகழ்வு ஷா ஆலாம் நகரில் நடைபெறவுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை, நவம்பர் 7, 2025 அன்று இரவு 8.00 மணி முதல் 11.00 மணி வரை டத்தாரான் மெர்டேக்கா ஷா ஆலாம் (Dataran Kemerdekaan Shah Alam) திடலில் இந்த நிகழ்வு நடைபெறும். அரச குடும்ப ஜோடியுடன் மக்கள் இணைந்து கொண்டாடும் இந்த விழாவிற்கு அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் திருமண வீடியோ திரையிடுதல், மக்கள் வழங்கும் வாழ்த்து வீடியோ காட்சி, கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் விருந்தினர் கலைஞர்களின் கலைப் படைப்புகள், வானவேடிக்கை நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு உணவு விருந்து உள்ளிட்ட பல்வேறு கவர்ச்சிகரமான அம்சங்கள் இடம் பெறவுள்ளன. இந்த அரச திருமண வரவேற்பின் ஒரு பகுதியாக, இளவரசரும் அவரது துணைவியாரும் மக்களுடன் கலந்துரையாடி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள உள்ளனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.