சூப்பர் மார்க்கெட்டில் தீ விபத்து: தீயணைப்பு வீரர் காயம்

17 டிசம்பர் 2025, 9:26 AM
சூப்பர் மார்க்கெட்டில் தீ விபத்து: தீயணைப்பு வீரர் காயம்
சூப்பர் மார்க்கெட்டில் தீ விபத்து: தீயணைப்பு வீரர் காயம்

ஷா ஆலம், டிச 17: இன்று காலை ஜோகூர் பாருவில் உள்ள ஜாலான் செரோஜா 56, தாமான் ஜோகூர் ஜெயாவில் அமைந்துள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் தீ விபத்து ஏற்பட்டது. அதை அணைக்கும் நடவடிக்கையின் போது, ஜோகூர் ஜெயா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்பு வீரர் ஒருவர் காயமடைந்தார்.

தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்று கொண்டிருந்த வேளையில், சிமெண்ட் ‘பிளாஸ்டர்’ துண்டுகள் கீழே விழுந்து, 23 வயதுடைய தீயணைப்பு வீரரின் வலது தோள்பகுதியில் தாக்கியது என ஜோகூர் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (JBPM) தொடர்பாளர் கூறினார்.

“சம்பவ இடத்திலேயே அவசர மருத்துவ சேவை பிரிவு (EMRS) குழுவினரால் முதற்கட்ட சிகிச்சை வழங்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காக சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனைக்கு (HSI) அந்த தீயணைப்பு வீரர் அனுப்பப்பட்டார். தற்போது அவர் வெளிநோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்,” என்று தெரிவிக்கப்பட்டது.

காலை 7.21 மணிக்கு அவசர அழைப்பு கிடைத்ததுடன், முதல் குழு இரண்டு நிமிடங்களுக்குள் சம்பவ இடத்தை சென்றடைந்தது என தொடர்பாளர் தெரிவித்தார்.

ஏறத்தாழ இரண்டு மணி நேரம் நீடித்த தீயணைப்பு நடவடிக்கை, காலை 9.10 மணிக்கு நிறைவடைந்தது.

இந்த தீ விபத்தில், அந்த சூப்பர் மார்க்கெட்டின் கட்டிட அமைப்பில் சுமார் 70 சதவீதம் சேதம் ஏற்பட்டுள்ளது,” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.