ஷா ஆலாம்,ஜூலை 7 - பந்திங் பள்ளிக்கூடத்தில் கத்தியைக் கொண்டு தாக்கிய மாணவி, தான் குறிவைத்ததாக நம்பப்படும் 10 பேரின் பட்டியலில், தனது மகளின் பெயரும் இடம் பெற்றுள்ளதை , கத்தி குத்துக்கு ஆளான மாணவியின் தந்தை உறுதிப் படுத்தினார்.
எனினும், தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியிருக்கும் அந்தப் பெயர் பட்டியல் எந்தளவிற்கு உண்மையானது என தமக்குத் தெரியாது என காயமடைந்த மாணவியின் தந்தையான 43 வயது மொஹமட் ஃபிருஸ் இப்ராஹிம் தெரிவித்தார்.
இதனிடையே, நேற்று பள்ளியில் நிகழ்ந்த அந்த கத்தி குத்து சம்பவம் தொடர்பில் , போலீஸ் விசாரணைக்கு உதவ தாம் வாக்குமூலம் அளித்திருப்பதாக அவர் கூறினார்.







