வாஷிங்டன், ஜூலை 1: 2026 உலகக்கிண்ணக் கால்பந்துப் போட்டியில் அமெரிக்கத் தேசிய அணி சாம்பியன் பட்டம் வென்றால், நிலவுக்குக் கால்பந்து ஒன்றை அனுப்பவுள்ளதாக அமெரிக்கத் தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகமான நாசாவின் (NASA) தலைவர் ஜாரெட் ஐசக்மேன் உறுதியளித்துள்ளார்.
அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் இந்த உலகக்கிண்ணக் தொடரில் பங்கேற்கும் அமெரிக்க அணிக்கு ஊக்கமளிக்கும் வகையில் இந்த சவாலை அவர் விடுத்துள்ளார்.
இதற்கு முன்னதாக, 2026 உலகக்கிண்ணக் கால்பந்துத் தொடரைக் கொண்டாடும் வகையில் நாசா நிறுவனம் அதிகாரப்பூர்வ ஃபிஃபா (FIFA) கால்பந்து ஒன்றைச் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) அனுப்பியிருந்தது.
எனினும், அமெரிக்கா உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றினால், அந்தப் பந்தை விண்வெளி நிலையத்தைத் தாண்டி, அதைவிட வெகு தொலைவில் உள்ள நிலவிற்கே கொண்டு செல்லவுள்ளதாக ஐசக்மேன் கூறினார்.
இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், அது கடந்த 1971ஆம் ஆண்டு நிலவின் மேற்பரப்பில் கோல்ஃப் விளையாடி வரலாற்றுச் சாதனை படைத்த விண்வெளி வீரர் ஆலன் ஷெப்பர்டின் சாதனையை முறியடிக்கப்படும்.







