சீனப் பள்ளிகளில் 41,000-கும் அதிகமான மலாய் மாணவர்கள் பயில்கின்றனர்

1 ஜூலை 2026, 7:50 AM
சீனப் பள்ளிகளில் 41,000-கும் அதிகமான மலாய் மாணவர்கள் பயில்கின்றனர்

கோலாலம்பூர்,ஜூலை 1 - சீனப் பள்ளிக்கூடங்களில் தற்போது 41,000-கும் மேற்பட்ட மலாய் மாணவர்கள் பயில்கின்றனர். இது சீனப் பள்ளிக்கூடங்களில் பதிந்திருக்கும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கையில் 9.01 விழுக்காடாகும்.

மேலும், கடந்த 5 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை உயர்ந்து கொண்டு வருவதாக கல்வி அமைச்சர் ஃபட்லீனா சீடேக், மக்களவைக்கு வழங்கிய எழுத்துப்பூர்ப பதிலில் தெரிவித்தார்.

இதனிடையே, தமிழ்ப் பள்ளிக்கூடங்களில் பயிலும் மலாய் மாணவர்களின் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் உயர்ந்து வந்துள்ளது.எனினும் அந்த எண்ணிக்கை சிறிய அளவிலே ஆகும்.

இவ்வாண்டு மே 31-ஆம் தேதி வரை தமிழ்ப் பள்ளிக்கூடங்களில் 320 மலாய் மாணவர்கள் பயின்று வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.